»   »  மன்றத்தின் கட்டுப்பாட்டுக்கும் ஒழுக்கத்துக்கும் களங்கம் விளைவித்தால்... - ரஜினி எச்சரிக்கை

மன்றத்தின் கட்டுப்பாட்டுக்கும் ஒழுக்கத்துக்கும் களங்கம் விளைவித்தால்... - ரஜினி எச்சரிக்கை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினி மன்றத்தின் கட்டுப்பாட்டுக்கும் ஒழுக்கத்துக்கும் களங்கம் விளைவிக்கும் உறுப்பினர்கள் மன்றத்திலிருந்து நீக்கப்படுவார்கள் என்று ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.

நான் அரசியலுக்கு வந்தால் அதை வைத்து பணம் சம்பாதிக்கலாம் என நினைப்பவர்களுக்கு ஒருபோதும் இடமில்லை. அவர்களை உள்ளே நுழையக் கூட விடமாட்டேன் என்று ரசிகர் மன்ற சந்திப்பின்போது ரஜினிகாந்த் அறிவித்திருந்தார்.


Rajini warns fan club members misusing his name

அதற்கு முக்கிய காரணம் சில ரசிகர்கள் நிர்வாகிகள் என்ற பெயரில் ரஜினி பெயரைப் பயன்படுத்தி பணம் வசூலிப்பதாகவும், மிரட்டல் விடுவதாகவும் ரஜினிக்கும் மன்ற நிர்வாகி சுதாகருக்கும் புகார்கள் வந்தன.


இதனைத் தொடர்ந்து இத்தகைய உறுப்பினர்களை மன்றத்திலிருந்து நீக்கும் அதிகாரத்தை மன்ற நிர்வாக சுதாகருக்கு வழங்கியுள்ளார் ரஜினி.


இதுகுறித்து ரஜினி வெளியிட்டுள்ள அறிக்கை:


Rajini warns fan club members misusing his name

அனைத்து ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்கு...


இக்கடிதம் மூலம் தெரிவிப்பது யாதெனில் எந்த ஒரு வகையிலும் நமது மன்றத்தின் கட்டுப்பாட்டிற்கும் ஒழுக்கத்துக்கும் நற்பெயருக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் நடந்து கொள்ளும் மன்றத்தின் நிர்வாகிகளையும் உறுப்பினர்களையும் நீக்க தலைமை மன்ற நிர்வாகி விஎம் சுதாகருக்கு அதிகாரத்தை அளிக்கிறேன்.


-இவ்வாறு ரஜினி அறிவித்துள்ளார்.

English summary
Rajinikanth has announced that he is giving power to VM Sudhakar to take disciplinary action against members of his club.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil