»   »  டிஜிடல் பாட்ஷாவை ரசித்துப் பார்த்த 'திரையுலக பாட்ஷா'!

டிஜிடல் பாட்ஷாவை ரசித்துப் பார்த்த 'திரையுலக பாட்ஷா'!

Posted By:
Subscribe to Oneindia Tamil

நவீன தொழில் நுட்பத்தில் மெருகேறி இருக்கும் 'பாட்ஷா' திரைப்படத்தைப் பார்த்த, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், படம் முன்பைவிட இன்னும் நன்றாக உள்ளதாகப் பாராட்டியுள்ளார்.

தமிழ் திரையுலகின் மூத்த தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகவும், அமரர் எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட நிறுவனம் என்ற பெருமைக்குரியதாகவும் கருதப்படும் 'சத்யா மூவிஸ்' நிறுவனம் தற்போது பொன்விழா கொண்டாடுகிறது.

Rajini watches digitally remastered Baasha

இதனைக் கொண்டாடும் வகையில், 'சத்யா மூவிஸ்' தயாரிப்பில் உருவாகி, இன்றுவரை சினிமா ரசிகர்களின் அபிமானத்துக்குரிய படமாகத் திகழும் ரஜினியின் 'பாட்ஷா' படத்தை நவீன தொழில் நுட்பத்தில் மெருகேற்றி மீண்டும் வெளியிடுகிறார் ஆர் எம் வீரப்பனின் மகன் தங்கராஜ்.

இவர் சமீபத்தில் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து அவரின் வாழ்த்துக்களை பெற்றார்.

"டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மெருகேறி இருக்கும் பாட்ஷா படத்தின் டிரைலர், ரஜினி சாரை வெகுவாகக் கவர்ந்து விட்டது. இந்த முயற்சிக்குப் பின்னால் ஆர் எம் வீரப்பன் மகனாகிய என்னுடைய பங்கு இருக்கிறது என்பதை அறிந்து பாராட்டினார் ரஜினி சார். தொழில் நுட்ப ரீதியாக என்னவெல்லாம் செய்ய பட்டிருக்கிறது என்பதை விரிவாக ரஜினி சாருக்கு விளக்கினேன். மேலும் படத்தின் பின்னணி இசையை முழுவதுமாக தேவா சார் புதுப்பித்து இருக்கும் விதத்தை கேள்விப்பட்டதும் மகிழ்ச்சி அடைந்தார். அதுமட்டுமின்றி, பாட்ஷா படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு ஆர் எம் வீரப்பன் சார் கையாண்ட யுக்திகளையும், எடுத்த முயற்சிகளையும் எங்களுக்கு ரஜினி சார் விவரித்தார்.

Rajini watches digitally remastered Baasha

இந்த டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் உருவாகி இருக்கும் பாட்ஷா படத்தை எவ்வாறு ரசிகர்களிடத்தில் முழுமையாக கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்கின்ற யோசனைகளை எங்களோடு பகிர்ந்து கொண்டார். படம் வெளியீட்டு திட்டங்களை பற்றியும், வெளியாகும் தேதி பற்றிய விவரங்களையும் கேட்டறிந்த ரஜினி சாரிடம், நாங்கள் ஏற்பாடு செய்திருக்கும் பிரம்மாண்ட பிரத்யேகக் காட்சி மற்றும் நன்கொடைக்காக லண்டனில் திரையிடப்படும் சிறப்பு காட்சி பற்றியும், ஜப்பான் ரசிகர்களின் வருகையை பற்றியும் தெரியப்படுத்தினோம். நாங்கள் எடுத்த முயற்சிகளுக்கு உறுதுணையாய் இருந்து, படம் வெற்றி பெற அவருடைய ஆசீர்வாதங்களையும், வாழ்த்துக்களையும் எங்களுக்கு வழங்கினார் ரஜினி சார்," என்றார் தங்கராஜ்.

English summary
Rajinikanth has recently watched the digitally remastered version of his blockbuster movie Baasha.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil