மன்றத்தைக் கலைத்த கையோடு.. அண்ணாத்த ஷூட்டிங்கில் குதிக்கும் ரஜினி.. மேற்கு வங்கம் செல்கிறார்!

சென்னை : சிறுத்தை சிவா இயக்கும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் ஃபஸ்ட்லுக் வெளியிடப்பட்டு, பெரும் வரவேற்பை பெற்றது.

நயன்தாரா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், மீனா, சூரி, ஜெகபதிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கொரோனா உள்ளிட்ட காரணங்களால் ஜனவரி மாதம் நிறுத்தப்பட்ட அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு, மார்ச் மாதம் மீண்டும் துவங்கி நடைபெற்றது. ஐதராபாத்தில் இதற்காக பலத்த பாதுகாப்புடன் செட் அமைக்கப்பட்டிருந்தது.

அமெரிக்கா சென்று திரும்பிய ரஜினி

அமெரிக்கா சென்று திரும்பிய ரஜினி

மே மாதம் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு, சென்னை திரும்பினார் ரஜினி. தொடர்ந்து டப்பிங் வேலைகளையும் விறுவிறுப்பாக முடித்து விட்டு, மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா புறப்பட்டு சென்றார். அங்கு மருத்துவ பரிசோதனை முடிந்து சில நாட்கள் ஓய்வில் இருந்த ரஜினி, தற்போது சென்ன திரும்பி உள்ளார்.

அரசியல் கேள்விக்கு முற்றுப்புள்ளி

அரசியல் கேள்விக்கு முற்றுப்புள்ளி

வந்த கையோடு அவ்வப்போது கிளப்பப்பட்டு வரும் அரசியல் பரபரப்புகளுக்கு முற்றுபுள்ளி வைத்துள்ளார். அத்துடன் தனது அரசியல் பிரவேசத்திற்காக ஆரம்பிக்கப்பட்ட ரஜினி மக்கள் மன்றத்தை கலைப்பதாகவும், அதன் நிர்வாகிகள் ரஜினி நற்பணி மன்றங்களில் தொடர்ந்து மக்கள் பணி ஆற்றுவார்கள் என அறிக்கை வெளியிட்டார்.

மேற்குவங்கம் செல்லும் ரஜினி

மேற்குவங்கம் செல்லும் ரஜினி

இதைத் தொடர்ந்து மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்து கொள்ள தயாராகி விட்டார் ரஜினி. அடுத்தகட்ட அண்ணாத்த படப்பிடிப்பிற்காக நாளை மறுநாள் மேற்குவங்கம் செல்ல உள்ளார். அங்கு 4 நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்ட பிறகு, சென்னை திரும்ப உள்ளார் ரஜினி.

மும்முரமாக நடக்கும் படப்பிடிப்பு

மும்முரமாக நடக்கும் படப்பிடிப்பு

அண்ணாத்த ஃபஸ்ட்லுக்கில் நவம்பர் 4 ம் தேதி தீபாவளியை முன்னிட்டு தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டதால், படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. ரஜினியை தொடர்ந்து குஷ்பு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரும் தாங்கள் நடிக்க வேண்டிய பகுதிகளில் நடித்து வருகின்றனர்.

ரிலீசுக்கு தயாராகும் அண்ணாத்த

ரிலீசுக்கு தயாராகும் அண்ணாத்த

ஜுலை மாத இறுதியில் அல்லது ஆகஸ்ட் மாதத்தில் அண்ணாத்த படப்பிடிப்பு முழுவதும் நிறைவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் நடைபெற உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X