»   »  ரஜினி நிச்சயமாக அரசியல் கட்சி தொடங்குகிறார்... அடிப்படை பணிகள் ஆரம்பம்! - தமிழருவி மணியன்

ரஜினி நிச்சயமாக அரசியல் கட்சி தொடங்குகிறார்... அடிப்படை பணிகள் ஆரம்பம்! - தமிழருவி மணியன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை: ரஜினி நிச்சயமாக அரசியல் கட்சி தொடங்க உள்ளார்.. அதற்கான அடிப்படைப் பணிகள் ஆரம்பமாகிவிட்டன என்று தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் கூறுகையில், "ரஜினிகாந்தை பொறுத்த வரையில், அவர் அரசியல் கட்சியை விரைவில் தொடங்குவது சர்வ நிச்சயம். அதில் எந்த விதமான ஐயத்திற்கும் இடமில்லை. அந்த கட்சியை தொடங்குவதற்கான அடிப்படைப் பணியில் அவர் முனைப்பாக ஈடுபட்டிருக்கிறார் என்பதை உங்களோடு நான் பகிர்ந்து கொள்கிறேன்.

Rajini will start political party soon

கமல் ஹாசனைப் பொறுத்த வரையில், அவர் ஒரு தனிக்கட்சியை தொடங்குவார் என்பது போன்று ஊடகங்கள்தான் ஒரு பிம்பத்தை உருவாக்கி முன் வைத்திருக்கின்றன. இது வரையில் கமல் ஹாசன் அவர்கள் தனியாக ஒரு கட்சியை தொடங்கப் போகிறேன் என்றோ, அரசியல் களத்தில் முனைப்பாக வந்து செயலாற்றப் போகிறேன் என்றோ சொல்லவில்லை.

Enthiran 2.0 Audio Launch Planned In Dubai-Filmibeat Tamil

ரஜினி தீவிரமாக கட்சி தொடங்கும் பணியில் இருப்பதால்தானோ என்னவோ, கமல் ஹாசன் அரசியல் பற்றி ஊடகங்களில் பரபரப்பு காட்டப்படுகிறது," என்றார்.

English summary
Gandhian Public Movement leader Tamizharuvi Manian says that Rajini would start his own party soon.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil