»   »  விஷால் & புதிய நிர்வாகிகளுக்கு பூங்கொத்து அனுப்பி வாழ்த்திய ரஜினிகாந்த்!

விஷால் & புதிய நிர்வாகிகளுக்கு பூங்கொத்து அனுப்பி வாழ்த்திய ரஜினிகாந்த்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தயாரிப்பாளர் சங்கத்துக்கு புதிதாகத் தேர்வான விஷால் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கு நடிகர் ரஜினிகாந்த் பூங்கொத்து அனுப்பி வாழ்த்து தெரிவித்தார்.

விஷால் உள்ளிட்ட புதிய நிர்வாகிகள் அறிமுக விழா நேற்று வியாழக்கிழமை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடந்தது.

Rajini wishes Vishal & Team

விழாவில் ரஜினி சார்பில் பூங்கொத்துகளை அவரது ரசிகர் மன்றப் பொறுப்பாளர் சுதாகர் வழங்கினார்.

ரஜினி அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், "தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற விஷால், பிரகாஷ்ராஜ், கவுதம் மேனன், எஸ்.ஆர்.பிரபு, ஞானவேல்ராஜா, கதிரேசன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள். தயாரிப்பாளர்கள் தேவைகளை பூர்த்தி செய்ய அந்த கடவுள் உங்களுக்கு துணை புரிவார். என்னுடைய வாழ்த்துகள்," என்று தெரிவித்துள்ளார்.

English summary
Actor Rajinikanth has wished Producers Council new office bearers Vishal & Team.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil