»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு விருது பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி, நடிகர் காகாராதாகிருஷ்ணன், இயக்குநர் கே.சங்கர், சண்டைப் பயிற்சியாளர் ஏ.கே.வெங்கடேசன் ஆகியோருக்குவழங்கப்பட்டது.

சிவாஜி கணேசன்-பிரபு அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான விருதுகளை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சரும், சிவாஜி காலத்து நடிகருமான சுனில்தத்சென்னையில் வழங்கினார்.

நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன், உயர் நீதிமன்ற நீதிபதி சொக்கலிங்கம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil