»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:

நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா திருமணம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வீட்டிலேயே நடைபெறும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமணம் மிக மிக எளிமையாக நடைபெறவுள்ளது.அவருக்கும் நடிகர் தனுஷுக்கும் ரஜினியின் போயஸ் கார்டன் வீட்டில் 100க்கும் குறைவானர்கள் முன்னிலையில்வரும் 18ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது.

இது குறித்து தனுஷின் தந்தையும்,இயக்குநருமான கஸ்தூரி ராஜா கூறுகையில், மிக மிக எளிமையாகதிருமணத்தை நடத்த இரு வீட்டாரும் முடிவு செய்துள்ளோம். எனவே ரஜினிகாந்த் வீட்டிலேயே திருமணம்நடக்கிறது.

இதில் 100 பேர் மட்டுமே கலந்து கொள்கிறார்கள், இவர்களில் பெரும்பாலானவர்கள் உறவினர்கள்தான்.

சம்பிரதாய முறைப்படி திருமணம் நடைபெறும். திருமண வரவேற்பு விழாவை சிறப்பாக நடத்த முடிவுசெய்துள்ளோம். அதில் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படும் என்றார்.

இத் திருமணத்திற்கு திரையுலகிலிருந்து யாரையும் அழைக்கப் போவதில்லை என்று தெரிகிறது.

இருப்பினும், தனுது குருவான இயக்குனர் கே.பாலச்சந்தர் மற்றும் நெருங்கிய நண்பரான கமல் இருவரையும்மட்டும் திருமணத்திற்கு ரஜினி அழைக்கப்பார் என்று தெரிகிறது.

முன்னதாக இத் திருமணம் ரஜினியின் ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடக்கும் என்று கூறப்பட்டது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil