»   »  படம் தொடங்குகிறார் ரஜினி

படம் தொடங்குகிறார் ரஜினி

Subscribe to Oneindia Tamil

அதோ இதோ என்று பூச்சாண்டிக் காட்டிக் கொண்டிருந்த ரஜினி வரும் மே 4ம் தேதி அடுத்த படத்தைத்தொடங்கவிருக்கிறார்.

பாபா படத்தின் தோல்விக்குப்பின் அடுத்த படம் குறித்து விரைவில் செய்தி வெளியிடப்படும் என்று கூறிய ரஜினிகடந்த 2 வருடங்களாக அது பற்றி மூச்சு காட்டாமல் இருந்தார். ஹரி இயக்கப் போகிறார், இல்லை இல்லை தேஜாஇயக்கப்போகிறார் என்று வதந்திகள் தொடர்ந்த வண்ணம் இருந்தன.

ஆனால் அவரது புதிய படத்தை இயக்குவது கே.எஸ்.ரவிக்குமார் என்று உறுதியாகி விட்டது. நகைச்சுவை கலந்துஅதிரடி ஆக்ஷன் படமாக இதை எடுக்கவுள்ளார்கள். படத் தொடக்க விழா சித்ரா பெளர்ணமி தினமான மே 4ம்தேதி நடைபெறுகிறது.

ஜூன் அல்லது ஜூலை மாதம் படப் பிடிப்பைத் தொடங்கி தீபாவளிக்கு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருக்கிறார்கள்.படத்திற்கு என்ன பெயர் வைப்பது என்று தீர்மானிக்கும் பணியை ரஜினியிடன் ஒப்படைத்து விட்டு கதைடிஸ்கஷனில் தீவிரமாக இருக்கிறாராம் கே.எஸ்.ரவிக்குமார்.

பிதாமகன் படத்தில் இளையராஜாவின் இசையைக் கேட்டு மயங்கிய ரஜினி தனது அடுத்த படத்துக்குஇசைஞானி என்று தீர்மானித்திருந்தார். இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாருக்கும், இளையராஜாவுக்கும் ஆகாதுஎன்பதால், என்ன செய்வது என்ற புதுக் குழப்பம் ஒரு பக்கம்.

ஏ.ஆர்.ரஹ்மானைக் கூப்பிடலாம் என்றால் அவர் இப்போது ஆங்கிலப் படங்களில் மூழ்கியுள்ளார். இப்போது ஹிட்பாடல்களைக் கொடுத்துக் கொண்டிருக்கும் வித்யாசாகர், ஹாரீஸ் ஜெயராஜ் ஆகியோரில் ஒருவரைக்கூப்பிடலாமா அல்லது இளையராஜாவுக்கும் கே.எஸ்.ரவிக்குமாருக்கும் சமாதானம் பேசலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறாராம் ரஜினி.

இசையமைப்பாளர், கதாநாயகி குறித்து 4ம் தேதி தெரிய வரும். இந்த வாய்ப்புக்காக மீனா உள்ளிட்டவர்கள் சிலகாலத்துக்கு முன் வலைவீசியது நினைவிருக்கலாம். படத்தை ரஜினி தொடங்குகிற மாதிரி இல்லாததால் அவரைநச்சரிப்பதை கைவிட்டிருந்த இந்த நடிகைகள் மீண்டும் கோதாவில் இறங்கலாம்.

பா.ம.கவுடனான மோதல் தீவிரமாக இருக்கும் நிலையில் குத்து டயலாக்குகள், மற்றும் மூக்கைத்துளைக்கும் அரசியல் நெடி கலந்த படுகாரமான மசாலாவாக இந்தப் படம் வெளிவரலாம்.

கொசுறு:

இதற்கிடையில், ஆட்டோகிராஃப் படம் வசூலில் புதிய சாதனை படைத்துக் கொண்டிருப்பதைக் கேள்விப்பட்டு,இயக்குனர் சேரனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார் ரஜினி.

திறமைசாலிகளும், கஷ்டப்பட்டு உழைப்பவர்களும் வாழ்க்கையில் என்றும் தோற்க மாட்டார்கள் என்ற ரஜினியின்தத்துவார்த்தமான வாழ்த்தைக் கேட்டு அக மகிழ்ந்து போயிருக்கிறார் சேரன்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil