Just In
- 1 hr ago
விஜய்யைத் தொடர்ந்து பூனையுடன் போஸ் கொடுக்கும் மோகன்லால்... வைரலாகும் பிக்ஸ்!
- 1 hr ago
சிலம்பாட்டத்தில் இத்தனை வகைகளா.. பிரமிக்க வைத்த பெண்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
- 1 hr ago
தயாரிப்பாளர் சங்க தலைவர் ஆன அம்மா.. அப்பாதான் ஆலோசகர்.. சிம்பு செம ஹேப்பி அண்ணாச்சி!
- 2 hrs ago
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை.. ரசிகர்கள் அதிர்ச்சி!
Don't Miss!
- Automobiles
வாடிக்கையாளர்களை கவர டைகன் மாடலில் குறைந்த விலை வேரியண்ட் அறிமுகம்... போர்ஷே அதிரடியால் போட்டியாளர்கள் கலக்கம்
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- News
தமிழகத்தின் முதல்வர் வேட்பாளர் ஸ்டாலின்- ராகுல் காந்தி ஏற்பதாக அறிவிப்பு!
- Sports
சிறப்பான தன்னலம் இல்லாத வீரர்... ரன்சை வச்சு மட்டும் அவரை மதிப்பிட முடியாது!
- Lifestyle
பொய் பேசுறது இந்த 6 ராசிகாரங்களுக்கு அல்வா சாப்பிடற மாதிரியாம்... ரொம்ப உஷாரா இருங்க இவங்ககிட்ட...!
- Finance
இந்தியாவுக்கு பெருமை சேர்த்த டிசிஎஸ்.. உலகின் மிகப்பெரிய ஐடி நிறுவனமாக உருவெடுத்த டிசிஎஸ்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஸ்டைல் மன்னன்.. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 70வது பிறந்தநாள்.. காமன் டிபியை வெளியிட்ட பிரபலங்கள்!
சென்னை: கோலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் மன்னனாக திகழும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் 70வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

சினிமாவில் இருந்து அரசியலுக்கு என்ட்ரியாகி உள்ள இந்த அண்ணாத்தேவின் பிறந்தநாளை ரசிகர்களை போல ஏகப்பட்ட பிரபலங்கள் தெறிக்கவிட்டு கொண்டாடி வருகின்றனர்.
ஹேப்பி பர்த்டே தலைவா என தற்போது வெளியாகி உள்ள அட்டகாசமான காமன் டிபியை ராஷ்மிகா மந்தனா, அபர்ணா பாலமுரளி, சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட ஏகப்பட்ட பிரபலங்கள் வெளியிட்டுள்ளனர்.

பிறந்தநாள்
சிவாஜி ராவ் கெய்க்வாட்டாக கர்நாடகாவில் 1950ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி பிறந்து, இன்று தமிழ்நாட்டு ரசிகர்கள் உள்ளங்களை மன்னனாக ஆட்சி செய்து வரும் சூப்பர்ஸ்டார் ரஜினியின் 70வது பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ரசிகர்கள், பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் என ஏகப்பட்ட பேர் வாழ்த்து சொல்லி வருகின்றனர்.

காமன் டிபி
ஆரம்ப காலம் முதல் அருணாச்சலம், பாட்ஷா, படையப்பா, தர்பார் என ஏகப்பட்ட படங்களின் போட்டோக்களுடன், சூப்பர்ஸ்டாரின் அரசியல் என்ட்ரி வரை ஏகப்பட்ட விஷயங்கள் அடங்கிய காமன் டிபியை தற்போது ஏகப்பட்ட சினிமா பிரபலங்கள் வெளியிட்டு வருகின்றனர். #HBDSuperstarRajinikanth மற்றும் #Annaatthe உள்ளிட்ட ஹாஷ்டேக்குகளை ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

ராஷ்மிகா வாழ்த்து
தென்னிந்திய ரசிகர்களை தனது வசீகரத்தால் கட்டிப் போட்டு வைத்திருக்கும் நேஷனல் க்ரஷ் ராஷ்மிகா மந்தனா தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் காமன் டிபியை வெளியிட்டுள்ளார். மிகப்பெரிய மனித நேயம் கொண்டவர் என்றும் இன்ஸ்பிரேஷன் என்றும் ராஷ்மிகா மந்தனா காமன் டிபியை வெளியிட்டு வாழ்த்தி உள்ளார்.

பொம்மி வாழ்த்து
சூரரைப் போற்று திரைப்படத்தில் பொம்மியாக கலக்கிய நடிகை அபர்ணா பாலமுரளியும் தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது ரஜினிகாந்தின் 70வது பிறந்தநாள் காமன் டிபியை வெளியிட்டு, இது தனக்கு கிடைத்த மிகப்பெரிய மரியாதை என்றும், அடுத்த ஆண்டு சிறப்பான ஆண்டாக அமைய வாழ்த்துக்கள் ரஜினி சார் என்றும் வாழ்த்தியுள்ளார்.

சிவகார்த்திகேயன் வாழ்த்து
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகரான நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் தற்போது ரஜினிகாந்தின் 70வது பிறந்தநாள் காமன் டிபியை வெளியிட்டு, நாம் அன்போடு நேசிக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினியின் காமன் டிபியை வெளியிடுவதில் எக்ஸ்ட்ரீம்லி ஹேப்பி என பதிவிட்டுள்ளார்.

ஆரம்பம் முதல் ஆகாயம் வரை
பைரவி படத்தில் கேட்டை எட்டி உதைத்து சினிமாவுக்குள் சாதாரணமாக தனது வாழ்க்கையை ஆரம்பித்த ரஜினிகாந்த், கபாலி, தர்பார் படங்களின் புரமோஷனை ஆகாயத்தில் நடத்தும் அளவுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்று உயர்ந்துள்ளதை குறிப்பிட்டு ஏகப்பட்ட மீம்களையும், ரஜினி பிறந்தநாள் மாஷ் அப்களையும் போட்டு தெறிக்கவிட்டு வருகின்றனர்.

காமன் டிபி சிறப்புகள்
காமன் டிபியில் உள்ள மூன்று சிறப்பு வாகனங்கள் ரஜினிகாந்தின் வாழ்க்கைப் பயணத்தை எப்படி மாற்றியுள்ளது என்பதை குறிக்கும் வகையில் சிடிபி உருவாக்கப்பட்டுள்ளதை ஜூம் போட்டு கண்டுபிடித்து ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர். பேருந்தில் கண்டக்டராக வாழ்க்கையை தொடங்கியது. ரஜினி மக்கள் மன்றம் சார்பாக தண்ணீர் லாரிகள் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கி வருவது. குதிரை வண்டியில் ராஜாவாக கோட்டைக்கு போகப் போறார் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

என்றைக்கும் ராஜா
ரசிகர்களின் தலைவனாக இருக்கும் ரஜினிகாந்த் அரசியலிலும் வெற்றி காண வேண்டும் என்பதே ஏகப்பட்ட ரசிகர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்களாக மாறி உள்ளன. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பட ரிலீஸ் என்றால் ரசிகர்கள் பெரிய கட் அவுட்கள் வைத்து பாலாபிஷேகம் செய்து கொண்டாடுவது வழக்கம். அண்ணாத்த படத்தை அமர்க்களப்படுத்தவும் ரசிகர்கள் வெயிட்டிங்.