விமர்சனம் பண்ணுங்க, ஆனா...குட்டி கதை சொல்லி ரஜினிகாந்த் அட்வைஸ்
சென்னை : எப்படி விமர்சனம் செய்ய வேண்டும் என குட்டி கதை ஒன்றை சொல்லி அட்வைஸ் செய்துள்ளார் ரஜினிகாந்த். ரஜினி பேசிய இந்த வீடியோ செம டிரெண்டாகி வருகிறது.
சமீப காலமாக பெரிய நடிகர்களின் படங்களை ப்ளூசட்டை மாறன் மிக கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். அவரை எதிர்ப்பவர்களையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். மற்றவர்களை குறை சொல்லி அதில் பாப்புலாரிட்டி தேட நினைக்கிறார் என நெட்டிசன்களும் அவரை விமர்சனம் செய்து வருகின்றனர். ஆனாலும் ப்ளுசட்டை மாறன் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்.

சிவாஜிக்கு நான் போட்டியா
இந்நிலையில் நடிகர் விக்ரம் பிரபு நடித்த படத்தின் விழாவில் கலந்து கொண்டு பேசிய ரஜினிகாந்த், இந்த விழாவிற்கு நான் வரும் போதே நினைச்சேன். இப்போது சிவாஜி இருந்திருந்தால் என்னுடைய தாடியை பார்த்துவிட்டு, என்னடா எனக்கு போட்டியா என கேட்டிருப்பார். அவருக்கு போட்டியாக யாரும் இருக்க வர முடியாது.

எப்படி விமர்சனம் செய்யனும்
அவர் இருக்கும் போதும் சரி. அவர் மறைவிற்கும் பிறகும் யாரும் கிடையாது. அவரை போல் ஒருவர் இனிமேல் பிறந்து தான் வர வேண்டும். படங்களை நல்ல படியாக எடுக்க வேண்டியது நம்முடைய கடமை. அதை சரியாக செய்கிறோம். அதை விமர்சிப்பவர்கள் சரியாக செய்ய வேண்டும். ஒருவரை வீட்டிற்கு அழைத்து சாப்பாடு போட்டு விட்டு, நல்லா சாப்பிடு என தன்மையாகவும் சொல்லலாம். நல்லா சாப்பிடு என கடுமையாகவும் சொல்லலாம்.

ரஜினி சொன்ன குட்டிக்கதை
வார்த்தை ஒன்று தான். அதை நாம் சொல்கிற விதம் தான் முக்கியம். ஒரு பெரிய ராஜா இருந்தாராம். அவருக்கு பல வருடங்களாக குழந்தை இல்லை. பல கோயில்களுக்கும் சென்று, பிரார்த்தனை செய்தும் குழந்தை பிறக்கவில்லை. பிறகு கொஞ்ச நாள் கழித்து ஒரு ஆண் குழந்தை பிறந்தது. நாட்டில் உள்ள ஜோதிடர்களை அழைத்து குழந்தையின் எதிர்காலம் பற்றி கேட்டாராம். எல்லோருமே, இந்த குழந்தையால் தான் உங்கள் உயிருக்கு ஆபத்து என சொல்லி உள்ளனர்.

ரஜினி கொடுத்த அட்வைஸ்
இதனால் கோபமடைந்த ராஜா, எல்லோரையும் சிறையில் அடைத்து விட்டு, 10 நாட்களில் தலையை எடுக்க உத்தரவு போட்டார். பிறகு நாட்டில் இருந்து பெரிய ஜோதிடர் ஒருவரை வரவழைத்து குழந்தையில் ஜாதகம் பற்றி கேட்டார். அவரோ, இந்த பையன் மன்னர்களுக்கெல்லாம் பெரிய மன்னராக இருப்பான். பெரிய புகழடைவான் என்றாராம். இதில் குஷியான ராஜா, உங்களுக்கு என்ன வேண்டுமோ கேளுங்கள் என்றாராம். அதற்கு அவர், எனக்கு எதுவும் வேண்டாம். சிறையில் அடைத்தவர்களை விடுதலை செய்யுங்கள் என்றாராம்.
இது போல் யாரிடம் எதை சொல்ல வேண்டுமோ அதை சொல்ல வேண்டும். அதை விட்டு விட்டு நீ சாக போற அது, இதுன்னு சொல்லிறது. படங்களை விமர்சனம் செய்யுங்கள். ஆனால் மனதை புண்படுத்தாமல் செய்யுங்கள் என சொல்லி அட்வைஸ் வழங்கினார்.


Click it and Unblock the Notifications











