Don't Miss!
- News
‘நம்ம ஸ்கூல் பவுண்டேஷன்’ : ஒரு மாத ஊதியத்தை அப்படியே முதல்வரிடம் வழங்கிய திமுக எம்.எல்.ஏக்கள்!
- Technology
கேப் விடாமல் தூள் கிளப்பும் ரெட்மி: மொத்த பேரின் கவனத்தையும் ஈர்க்கும் டர்போ ஸ்மார்ட்போன்!
- Lifestyle
வார ராசிபலன் 22.01.2023-28.01.2023 - இந்த வாரம் இந்த ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்...
- Finance
அம்பானி குடும்பத்தின் மருமகள்கள், மருமகன்.. யாரு பெஸ்ட்..?!
- Sports
"யார்பா அது முரட்டு ஆளா ஓடுற" ரோகித்தை முட்டி தள்ளிய பாதுகாவலர்.. 2வது ODIல் சுவாரஸ்ய நிகழ்வு!
- Automobiles
மாருதி கார் மட்டும்தான் மைலேஜ் தருமா? களத்தில் இறங்கிய டாடா! கூடவே பாதுகாப்பாகவும் இருக்க போகுது!
- Travel
தரிசனம் முதல் ரூம் வரை திருப்பதியில் உயர்த்தப்பட்ட கட்டணங்கள் – தவிக்கும் பக்தர்கள்!
- Education
chennai Postal Agents Recruitment 2023:அஞ்சல் துறையில் தேர்வின்றி நேரடி நியமனம்...!
ஃபர்ஸ்ட் திருப்பதி.. நெக்ஸ்ட் அமீன் தர்கா.. ஏ.ஆர். ரஹ்மான் உடன் ரஜினிகாந்த் வழிபாடு.. என்ன காரணம்?
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் நேற்று இரவு திருப்பதி சென்ற நிலையில், இன்று காலை அங்கே தரிசனம் செய்தார். அதன்பின்னர் தற்போது ஏ.ஆர். ரஹ்மான் உடன் இணைந்து கடப்பாவில் 400 ஆண்டுகள் பிரசித்தி பெற்ற அமீன் தர்காவில் வழிபாடு நடத்தி உள்ள வீடியோ டிரெண்டாகி வருகிறது.
நடிகர் ரஜினிகாந்தின் 72வது பிறந்தநாள் கடந்த டிசம்பர் 12ம் தேதி கொண்டாடப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது பிரசித்தி பெற்ற கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த்.
ரஜினிகாந்த் உடன் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இணைந்து தர்காவில் வழிபாடு நடத்தி இருப்பது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
தேவுடா.. தேவுடா.. ஏழுமலை தேவுடா.. திருப்பதியில் மகள் ஐஸ்வர்யாவுடன் நடிகர் ரஜினிகாந்த் சாமி தரிசனம்!

திருப்பதியில் சாமி தரிசனம்
நடிகர் ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உடன் திருப்பதிக்கு சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று இரவு சென்றுள்ளர். திருப்பதி தேவஸ்தானம் சார்பில் அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கே அவர் சாமி தரிசனம் செய்த காட்சிகள் வீடியோக்களாக வெளியாகி சமூக வலைதளங்களில் டிரெண்டாகின.

அமீன் தர்காவில் வழிபாடு
திருப்பதி கோயிலில் சாமி தரிசனம் முடித்த கையோடு தற்போது கடப்பாவில் உள்ள 400 ஆண்டுகள் பிரசித்தி பெற்ற அமீன் பீர் தர்காவில் நடிகர் ரஜினிகாந்த் வழிபாடு நடத்திய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை இன்பதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளன.

ஏ.ஆர். ரஹ்மான் உடன்
மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் உடன் அமீன் தர்காவில் நடிகர் ரஜினிகாந்த் வழிபாடு நடத்தி உள்ளார். அங்கே ரஜினிகாந்த் மற்றும் ஏ.ஆர். ரஹ்மானுக்கு சிறப்பு மரியாதைகளும் மாலைகளும் அணிவிக்கப்பட்டன. மதங்களை கடந்து மனிதங்களை நேசிக்கும் மனிதராக ரஜினிகாந்த் உள்ளார் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.

லால் சலாம் படம்
நடிகர் தனுஷை விவாகரத்து செய்த நிலையில், ஆல்பம் பாடல் ஒன்றை பல ஆண்டுகளுக்கு பிறகு இயக்குநர் அவதாரம் எடுத்து இயக்கி இருந்தார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அடுத்ததாக அவர் தனது அப்பா ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் லால் சலாம் படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வரும் நிலையில், ரஜினிகாந்த் மற்றும் ஏ.ஆர். ரஹ்மான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உடன் திருப்பதி மற்றும் அமீன் தர்காவுக்கு சென்று வழிபாடு நடத்தி உள்ளனரா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

ரஜினிகாந்த் பிறந்தநாள்
கடந்த டிசம்பர் 12ம் தேதி சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது 72வது பிறந்தநாளை எளிமையான முறையில் கொண்டாடினார். பிறந்தநாளை தொடர்ந்து லால் சலாம் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்கு முன்னதாக கோயில்களில் சிறப்பு வழிபாடுகளை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஜெயிலருக்கு வெயிட்டிங்
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் படம் விரைவில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் சம்மருக்கு தரமான சம்பவமாக ஜெயிலர் இருக்கும் என ரசிகர்கள் அந்த படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கின்றனர். லால் சலாம் படமும் அடுத்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.