எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. 46 வருடத்திற்கு பிறகு நடக்கும் மேஜிக்.. இரண்டு ஹீரோ கதையில் ரஜினி, கமல்?

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கூலி திரைப்படம் தியேட்டரில் மாஸ் காட்டி வருகிறது. பான் இந்திய திரைப்படமாக வெளியான இப்படம் முதல் நான்கு நாட்களில் 404 கோடியை வசூலித்து உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, கமல் சேர்ந்து படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இந்த தகவலால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

சூப்பர் ஸ்டார் பட்டத்துடன் வலம் வருகிறர் நடிகர் ரஜினிகாந்த். அதைப் போல் கமல்ஹாசனுக்கும் தனி ரசிகர்கள் இருக்கிறார்கள். இன்றைய கோலிவுட்டில் இருவருமே மிகப்பெரிய ஜாம்பவான்களாக வருகிறார்கள். டாப் நடிகர்களாக விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிவகார்த்திகேயன் நடிகர்கள் இருந்தாலும் அவர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் ஹிட் திரைப்படங்களை கொடுத்து வருகின்றனர். இவர்கள் ஆரம்ப காலத்தில் அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு, அவள் அப்படித்தான், 16 வயதினிலே, அவர்கள், ஆடு புலி ஆட்டம், இளமை ஊஞ்சலாடுகிறது, அலாவுதீனும் அற்புத விளக்கு, நட்சத்திரம், தில்லு முள்ளு, நினைத்தாலே இனிக்கும் என பல திரைப்படங்களில் நடித்துள்ளனர்.

Rajinikanth Kamal haasan Lokesh
Photo Credit:

7 படங்கள் ஹிட்: இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த 13 திரைப்படங்களில் ஏழு திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற திரைப்படங்களாகும். ஒரு கட்டத்திற்கு மேல் இருவருக்கும் என்று ரசிகர் கூட்டம் அதிகரித்ததால், இருவரும் சேர்ந்து நடிக்க வேண்டாம் என்று முடிவு செய்து அவரவர் பாதைகளில் பயணம் செய்ய தொடங்கி விட்டார்கள். ஆனால், இன்றைய காலத்து ரசிகர்களும் இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்தால் நன்றாக இருக்கும் என்றும், இருவரும் சேர்ந்து நடிக்க மாட்டார்களா? என பல தருணங்களில் கேட்டு வருகின்றனர்.

தற்போது அவர்களின் ஆசை நிறைவேறும் வகையில் இருவரும் சேர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்து உருவாக உள்ள படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, Red Giant நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக உதயநிதியின் மகன் இன்ப நிதி விரைவில் பொறுப்பேற்க உள்ளார். எனவே, ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் நடிக்கும் படத்தை RKFI மற்றும் Red Giant இணைந்து தயாரிக்க உள்ளது. இன்பநிதி ரெட் ஜெயண்ட் உடன் இணையும் நாளில் இந்தப் படம் குறித்த அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார்.

மீண்டும் இணைகிறார்கள்: கூலி படத்தின் ரிலீஸ்க்கு முன்னதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் இருவரையும் தனித்தனியாக நேரில் சந்தித்து டூயல் ஹீரோ கதையை கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் சந்தித்து பேசி இணைந்து நடிப்பது பேசியதாக தெரிகிறது. இணையத்தில் வெளியாகி உள்ள இந்த அறிவிப்பால் இரண்டு ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளார். ரஜினி மற்றும் கமல் இருவரும் 1979 ஆம் ஆண்டு வெளியான நினைத்தாலே இனிக்கும் திரைப்படத்திற்கு பிறகு சேர்ந்து நடிக்கவே இல்லை. கிட்டத்தட்ட 46 ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் சேர்ந்து நடிக்க உள்ள தகவல் ரசிகர்களை உச்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X