யாரிடமும் சொல்லாத ரகசியத்தை மிர்ச்சி சிவாவிடம் கூறிய கமல் & ரஜினி

சென்னை: நடிகர் சிவா நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் இடியல். அவர் நடித்துள்ள சுமோ திரைப்படம் முடிக்கப்பட்டு வெளிவராமல் இருக்கிறது.

இதைத் தவிர்த்து காசேதான் கடவுளடா, சலூன், கோல்மால், சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட் ஃபோன் சிம்ரனும் ஆகிய திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் தான் ரேடியோவில் பணிபுரிந்த அனுபவம் பற்றி மிர்ச்சி சிவா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்,

ஆர்.ஜே சிவா

ஆர்.ஜே சிவா

நடிகனாக வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த நடிகர் சிவாவை அவருடைய நகைச்சுவை திறன் காரணமாக வலுக்கட்டாயமாக ரேடியோவில் ஜாக்கியாக பணிபுரிய அழைத்துச் சென்றார்களாம். ஆனால், அங்கு சென்ற பிறகுதான் பல மக்களை அவரால் சென்றடைய முடிந்ததாம். அவர் நடத்திய ஒரு ஷோவில் மக்கள் அனுப்பிய எஸ்.எம்.எஸ் இந்திய அளவில் முதலிடம் பிடித்து, மும்பையிலிருந்து ஒரு குழு அந்தத் தலைப்பை வைத்து பெரிய நிகழ்ச்சி நடத்த ஆராய்ச்சியெல்லாம் செய்ததாக கூறியுள்ளார்.

படங்களின் ஸ்பூஃப்

படங்களின் ஸ்பூஃப்

படங்களின் பெயரை சற்று மாற்றியமைத்து ஜுராசிக் பனங்கல் பார்க் போன்ற தலைப்புகள் வைத்து வேடிக்கையாக ஸ்பூஃப் செய்து பேசுவாராம். அதேபோல காதலா காதலா என்ற ஒரு நிகழ்ச்சியில் காதலில் பிரச்சனைகளை சந்திப்பவர்களுக்கு ஆலோசனை கூறுவாராம். அப்படி, ஒரு பெண்ணை தீவிரமாக காதலித்த நபர் ஒருவர் எப்படியாவது அந்தப் பெண்ணிடம் கூறுங்கள் என்று சிவாவிற்கு அடிக்கடி கடிதங்கள் எழுதுவாராம். நானும் அவர் சொன்ன டைட்டானிக் கதாநாயகியான கேட் வின்ஸ்லெட்டின் பெயரை சொல்லி அவரது காதலை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று பேசியதாக சிவா கூறியிருக்கிறார்.

ராஜா ரசிகன்

ராஜா ரசிகன்

இளையராஜாவின் தீவிர ரசிகரான சிவா பலமுறை அவரை பேட்டி எடுத்துள்ளாராம். முதல் பேட்டியில் ஆன்மீகம் என்றால் என்ன என்று சிவா கேட்டபோது, உன் வேலை என்ன என்று பதிலுக்கு இளையராஜா கேட்டாராம். என்ன சொல்வதென்று சிவா யோசிக்க, என் வேலை என்ன என்று கேட்டாராம். அதற்கும் பதில் சொல்ல முடியாமல் சிவா திணறியபோது, உன் வேலை பேட்டி எடுப்பது, என் வேலை இசையமைப்பது. அவனவன் வேலையை அவனவன் சரியாக செய்தால் அதுதான் ஆன்மீகம் என்று பதிலளித்தாராம். மேலும் தான் பேட்டியெடுக்கும் விதம் அவருக்கு பிடித்துப் போனதால் பல முறை பேட்டி கொடுத்தாராம்.

கமல் ரஜினி

கமல் ரஜினி

மிர்ச்சி சிவா கமல் ஹாசன் மற்றும் ரஜினிகாந்தையும் பேட்டி எடுத்துள்ளாராம். ரஜினிகாந்திடம் நீங்கள் கிரிக்கெட் ஆடுவீர்களா என்று சிவா கேட்டபோது, நான் ஃபாஸ்ட் பவுலர் என்று ரஜினி கூறினாராம். அதேபோல உங்கள் வீட்டில் உள்ளவர்கள் உங்களை எப்படி அழைப்பார்கள் என்று கமல் ஹாசனிடம் கேட்டபோது என்னை எப்போதும் சனியன் என்றுதான் அழைப்பார்கள் என்று கமல் ஹாசன் வேடிக்கையாக கூறியதாக சிவா பல சுவாரசியமான தகவல்களை கூறியிருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X