»   »  விசாரணை... தமிழில் ஒரு உலக சினிமா... ரஜினிகாந்த் பெருமிதம்

விசாரணை... தமிழில் ஒரு உலக சினிமா... ரஜினிகாந்த் பெருமிதம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வெற்றிமாறனின் விசாரணை படத்தைப் பார்த்த பின்னர் அப்படத்தை நடிகர் ரஜினிகாந்த் மனந்திறந்து பாராட்டியிருக்கிறார்.

நடிகர் தனுஷின் வொண்டர்பார் நிறுவனமும், வெற்றிமாறனின் கிராஸ் ரூட் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கும் படம் விசாரணை. பிரபல எழுத்தாளர் எம்.சந்திரசேகரின் லாக் - அப் நாவலை அடிப்படையாக வைத்து விசாரணை உருவாகி இருக்கிறது.


அட்டகத்தி தினேஷ், ஆனந்தி, முருகதாஸ், சமுத்திரக்கனி, கிஷோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசைமயமைத்து இருக்கிறார்.


Rajinikanth Appreciates Visaranai Movie

வெளியாகும் முன்பே பல்வேறு விருதுகளையும் விசாரணை வென்றிருப்பதால் இப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக இருக்கிறது.இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் விசாரணை படத்தைப் பார்த்து படக்குழுவினரை குறிப்பாக வெற்றிமாறன்- தனுஷ் இருவரையும் மனந்திறந்து பாராட்டியிருக்கிறார்.


விசாரணை குறித்து ரஜினி "விசாரணை மாதிரி ஒரு படத்தை தமிழில் நான் இது வரை பார்த்ததில்லை. உலக படவரிசையில் ஒரு தமிழ் படம்.


இப்படத்தைத் தயாரித்த வெற்றிமாறன் - தனுஷ் இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்" என்று சற்று முன்னர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.


Rajinikanth Appreciates Visaranai Movie

இதனால் வெற்றிமாறன்-தனுஷ் உள்ளிட்ட விசாரணை படக்குழுவினர் தற்போது மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர். சில தினங்களுக்கு முன்னர் நடிகர் கமல்ஹாசன் இப்படத்தைப் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.


நாளை உலகம் முழுவதும் வெளியாகும் விசாரணை பெங்களூர் நாட்கள் மற்றும் சாஹசம் என்னும் வீர செயல் ஆகிய படங்களுக்கு பலத்த போட்டியாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


English summary
Rajini Kanth has Watched Visaranai movie and Praised Director Vetrimaran - Dhanush.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil