»   »  எம்எஸ் குகன் மகள் திருமண வரவேற்பு... ரஜினிகாந்த் பங்கேற்று வாழ்த்து!

எம்எஸ் குகன் மகள் திருமண வரவேற்பு... ரஜினிகாந்த் பங்கேற்று வாழ்த்து!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான எம்எஸ் குகன் மகளின் திருமண வரவேற்பில் கலந்து கொண்டு வாழ்த்தினார் ரஜினிகாந்த்.

தமிழ் சினிமாவின் அடையாளமாகத் திகழும் தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் நிறுவனத்தை நிர்வகித்து வரும் ஏவிஎம் சரவணனின் பேத்தியும், எம்.எஸ்.குகனின் மகளுமான அபர்ணா - திரைப்படத் தயாரிப்பாளர் எம்.ரகுநாதன் மகன் ஷ்யாம் ஆகியோருக்கு இன்று ஏவிஎம் ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெறுகிறது.

Rajinikanth attends AVM family marriage

அதே மண்டபத்தில் நேற்று மாலை திருமண வரவேற்பு நடைபெற்றது. இந்த திருமண வரவேற்பில் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட தமிழ் திரையுலக பிரபலங்கள் பலர் நேரில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.

Rajinikanth attends AVM family marriage

எம்பிஏ பட்டதாரியான ஷ்யாம், இயக்குனர் மிஷ்கின் இயக்கவுள்ள அடுத்த படத்தில் ஹீரோவாக அறிமுகமாகவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Actor Rajinikanth has attended AVM family marriage on Wednesday and blessed the couple Aparna - Shyam.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil