Don't Miss!
- News
மணிப்பூரில் இருந்து மியான்மர் சென்ற 2 தமிழர்கள் சுட்டுக் கொலை- நீதி கோரி போராட்டம்- வைகோ கண்டனம்
- Sports
6 ஆண்டுகளுக்கு பிறகு கோலிக்கு சோகம்.. டெஸ்ட் தர வரிசையில் பண்ட் பாய்ச்சல்
- Finance
தவறான வங்கி கணக்கிற்கு 7 லட்சம்.. லாட்டரி என நாடகம்.. போராடி பெற்ற பெண்..!
- Lifestyle
சீனி பணியாரம்
- Technology
இனி வீடே தியேட்டர் தான்: 50% தள்ளுபடியுடன் Samsung, Realme, Oneplus, Sony ஸ்மார்ட்டிவிகள்!
- Automobiles
இந்தியாவில் கடந்த ஜூன் மாதம் அதிகம் விற்பனையான ஹேட்ச்பேக் கார்களின் பட்டியல்... மாருதி ஆதிக்கம்!
- Travel
ஆசியாவிலேயே தூய்மையான கிராமம் – மேகாலயாவில் உள்ள மவ்லின்னாங்கின் சுற்றுலாத் தலங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
விஜய்யை முந்தி, மீண்டும் முதலிடத்தை பிடித்த ரஜினி...எதுல தெரியுமா ?
சென்னை : விஜய் தற்போது நடித்து வரும் தளபதி 66 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் டைட்டில் வந்தாலும் வந்தது. அனைவருமே அதை பற்றி தான் பேசி வருகின்றனர். அது எந்த படத்தின் காப்பி என ஒரு கூட்டம் பேசி வருகிறது.
அதே சமயம் ரஜினி படங்களை காப்பி செய்வது போலவே விஜய்யின் பட டைட்டில், போஸ்டர், விஜய்யின் சமீபத்தில் செயல்பாடுகள் உள்ளதாக பலர் கூறி வருகின்றனர். இதுனால் தமிழ் சினிமாவின் அடுத்த ரஜினிகாந்த் அல்லது அடுத்த சூப்பர்ஸ்டார் ஆக விஜய் முயற்சி செய்கிறாரா என்ற கேள்வியும் எழுந்தள்ளது.
கோலிவுட்டில் வசூல் வேட்டையாடிய டாப் 3 படங்கள்...இவங்கள விட்டா ஆளே இல்ல போலயே?
அரசியல், சினிமா போன்றவற்றில் விஜய் - ரஜினி இடையே ரகசிய மோதல் ஒன்று இருந்து வருவதாக கூட வதந்திகள் பரவி வருகின்றன. அதிலும் சீமான் போன்றவர்கள் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் விஜய் தான் என பேசி உள்ளது மற்றொரு சலசலப்பை கிளப்பி உள்ளது.

ரஜினி தான் உண்மையான வசூல்ராஜா
தமிழ் சினிமாவை பொருத்தவரை எத்தனை மாஸ் ஹீரோக்கள் வந்தாலும், கலெக்ஷன் கல்லா கட்டினாலும், ரசிகர்கள் மனதில் முதலிடத்தில் இருப்பது என்னவே ரஜினி தான். இதுவரை தமிழில் வெளியான படங்களிலேயே அதிக வசூலை பெற்ற படங்களின் பட்டியலில் ரஜினி நடித்த 2.ஓ படம் தான் முதலிடத்தில் உள்ளது. இந்த படம் 655 முதல் 800 கோடிகளை உலகம் முழுவதும் வசூல் செய்தது.

போட்டிக்கு வந்த கமலின் விக்ரம்
இரண்டாவது இடத்திலும் ரஜினியின் கபாலி படம் தான் இருந்தது. இந்த படம் 300 கோடிகளை வசூல் செய்திருந்தது. இதுவரை வேறு எந்த நடிகரின் படமும் இந்த சாதனையை முறியடிக்காத நிலையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது கமல் நடித்து சமீபத்தில் வெளிவந்த விக்ரம் படம் தான் கபாலி படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது. விக்ரம் படம் இதுவரை 375 கோடிகளை வசூல் செய்துள்ளது. இதனால் கபாலி படம், அதிகம் வசூல் செய்த தமிழ் படங்களின் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

ரஜினி, கமல் தான் டாப்
இந்த பட்டியல் அடிப்படையில் பார்த்தால் எத்தனை ஹீரோக்கள் வந்தாலும் ரஜினி, கமலை தவிர வேறு யாருடைய படமும் வசூல் சாதனை படைக்க முடியாது என்ற நிலையே உள்ளது. இந்த சாதனையை எந்த நடிகரின் படம் முறியடிக்க போகிறது என்பது தான் பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது. என்ன தான் வசூல் சாதனைல பாகுபலி 2 படத்தின் தமிழக வசூல் சாதனையை விக்ரம் முந்தி விட்டதாக கூறப்பட்டாலும், ரஜினியின் 2.ஓ வசூல் சாதனையை முறியடிக்க வாய்ப்பு மிக குறைவு தான்.

இதிலும் ரஜினி தான் டாப்
அதிக வசூல் செய்த படங்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது போல், அதிக சம்பளம் பெரும் தென்னிந்திய நடிகர்கள் பட்டியலில் மீண்டும் ரஜினி முதலிடத்தை பிடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த பட்டியலில் ரஜினி தான் பல காலமாக முதலிடத்தில் இருந்தார். ரஜினி இதுவரை ஒரு படத்திற்கு ரூ.90 கோடிகளை சம்பளமாக வாங்கி வந்தார்.

முதலிடத்தை பிடித்த விஜய்
ஆனால் சமீபத்தில் விஜய் நடித்த பீஸ்ட் படத்திற்கு விஜய்க்கு சம்பளமாக சன் பிக்சர்ஸ் 100 கோடி கொடுத்தது. இதனால் அதிகம் சம்பளம் பெரும் தென்னிந்திய நடிகர்கள் பட்டியலில் ரஜினியை இரம்டாவது இடத்திற்கு தள்ளி, முதலிடத்தை பிடித்தார் விஜய். பீஸ்ட் படத்திற்கு சன் பிக்சர்ஸ் 100 கோடி சம்பளம் வழங்கிய நிலையில், தற்போது நடித்து வரும் வாரிசு படத்திற்கு ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் விஜய்க்கு 120 கோடி வரை சம்பளம் பேசி உள்ளதாக தகவல் வெளியானது.

விஜய்யை முந்திய ரஜினி
இந்த நிலையில் லேட்டஸ்ட் தகவலாக, ரஜினி அடுத்ததாக நடிக்க உள்ள ஜெயிலர் படத்தில் தனது சம்பள தொகையை உயர்த்தி விட்டதாக சமீபத்தில் தகவல் வெளியானது. ஜெயிலர் படத்திற்காக ரஜினிக்கு 128 முதல் 148 கோடி வரை சம்பளம் வழங்க சன் பிக்சர்ஸ் டீல் பேசி உள்ளதாக பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் உண்மையாகும் பட்சத்தில் அதிக சம்பளம் பெரும் தென்னிந்திய நடிகர்கள் பட்டியலில் ரஜினி மீண்டும் முதலிடத்தை பிடிப்பார்.