»   »  பாட்ஷா வசனம் படத் தலைப்பாகிறது... ரஜினியைச் சந்தித்து ஆசி பெற்ற ஜிவி பிரகாஷ்!

பாட்ஷா வசனம் படத் தலைப்பாகிறது... ரஜினியைச் சந்தித்து ஆசி பெற்ற ஜிவி பிரகாஷ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாட்ஷா படத்தில் ஒரு திருப்புமுனைக் காட்சியில் ரஜினி பேசும் ஒரு வசம் படு பிரபலம்... அது, 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு..'.

இதுவே இப்போது ஒரு படத்தின் தலைப்பாகிறது. படத்தின் ஹீரோ ஜிவி பிரகாஷ். தயாரிப்பது ரஜினியின் 2.ஓ படத்தைத் தயாரிக்கும் லைகா நிறுவனம்தான்.


Rajinikanth blesses GV Prakash

இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இன்று வெளியாகவிருக்கும் நிலையில், ரஜினியைச் சந்தித்துள்ளார் ஜிவி பிரகாஷ்குமார். படத்துக்கு ரஜினியின் வசனமான ‘எனக்கு இன்னோர் பேர் இருக்கு' என்ற தலைப்பு வைத்திருப்பதால், ரஜினியைச் சந்தித்து ஆசி பெற்றாராம் ஜிவி பிரகாஷ்.


2.0 படப்பிடிப்பில் இருந்த ரஜினியை ஜி.வி.பிரகாஷும், இயக்குனர் சாம் ஆண்டனும் நேரில் சென்று சந்தித்துள்ளனர். ரஜினியும் அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

English summary
Musician turned actor GV Prakash recently met Rajinikanth and got his blessings for his new movie Enakku Innoru Per Irukku.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil