»   »  விஷால் தங்கை திருமண வரவேற்பு... ரஜினிகாந்த் நேரில் வாழ்த்து!

விஷால் தங்கை திருமண வரவேற்பு... ரஜினிகாந்த் நேரில் வாழ்த்து!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று மாலை சென்னையில் நடந்த விஷால் தங்கை ஐஸ்வர்யா ரெட்டி - உம்மிடி க்ரிதிஷ் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் கலந்து கொண்டு வாழ்த்தினார்.

ஐஸ்வர்யா ரெட்டி - உம்மிடி க்ரிதிஷ் திருமணம் நேற்று காலை நடந்தது. மாலையில் திருமண வரவேற்பு எம்ஆர்சி அரங்கில் நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு ​நடிகர் ரஜினிகாந்த் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தினார்.

அரசியல் பிரமுகர்கள்

அரசியல் பிரமுகர்கள்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் மூலம் வாழ்த்து செய்தி அனுப்பி இருந்தார். கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தா பாண்டியன், திமுக ஆற்காடு வீராசாமி, வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன், அஇஅதிமுக பொன்னையன், காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன், அமைச்சர் மாபா பாண்டியராஜன், ம நடராஜன், ம.தி.மு.க தலைவர் வைகோ உள்பட பல அரசியல் தலைவர்கள் வந்திருந்தனர்.

தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள்

தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள்

தயாரிப்பாளர் சங்க பொருளாளர் எஸ் ஆர் பிரபு, முன்னாள் அமைச்சர் ஆர்எம். வீரப்பன், கலைப்புலி எஸ் தாணு, கேடி குஞ்சுமோன், எபி குஞ்சுமோன், ஐசரி கணேஷ், ரவி கொட்டாக்கராவ், கிருஷ்ணா ரெட்டி, மன்னன், ஆர்.பி.சௌத்ரி, ராமவாசு, கே.ராஜன், நந்தகோபால், ஏ.சி. சண்முகம், எடிட்டர் மோகன் சித்ரா இலட்சுமணன், இயக்குநர்கள் சுரேஷ் கிருஷ்ணா, மனோ பாலா, எம்.ராஜேஷ், சக்தி சிதம்பரம், விக்ரமன், எஸ்.ஏ. சந்திரசேகர், லிங்குசாமி, சுசீந்திரன், பாண்டிராஜ் , பொன்ராம், ஹரி, பிரபுதேவா

நடிகர் நடிகைகள்

நடிகர் நடிகைகள்

நடிகர்கள் விஜய், ​சிவகுமார், தென்னிந்திய நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி, மோகன், விஜயகுமார், கஞ்சாகருப்பு, ராஜேஷ், அருண் பாண்டியன், நட்டி நட்ராஜ், சாரதா, அதுல்யா, அதீதி மேனன், ஷீலா, சுஷ்மிதா பாலி, விக்ராந்த் குடும்பத்தினர், விஷ்ணு விஷால், ஹன்சிகா, ஆனந்த் ராஜ், கோவை சரளா, ச ரேகா , அசோக் செல்வன், காயத்ரி ரகுராம், எஸ்.எஸ்.ஆர். கண்ணன், ராஜ்கிரண், ஐஸ்வர்யா அர்ஜுன், விஜய் வசந்த் , பிரஷாந்த், முனீஸ்காந்த் , சாக்ஷி அகர்வால், சோனியா அகர்வால், அருண் விஜய் குடுபத்தினர், சூரி, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, தரன், கவிஞர் வைரமுத்து, பிறைசூடன் உள்ளிட்டோர் பங்கேற்று வாழ்த்தினர்.

நன்கொடை

நன்கொடை

​வரவேற்பு விழாவில் தாம்பூலம் வழங்குவதற்கு பதிலாக ஒரு லட்சம் ரூபாயை கேன்சர் இன்ஸ்டிடியுடிக்கு (WIA) நன்கொடையாக வழங்க ஏற்பாடு செய்தார் விஷால்.

English summary
Rajinikanth has attended the reception of Vishal's sister Aishwarya Reddy - Ummidi Kridish marriage reception

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil