மாநாடு படக்குழுவை பாராட்டிய ரஜினிகாந்த்.. இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு அந்த வாய்ப்பு கிடைக்குமா?

சென்னை: மாநாடு திரைப்படத்திற்கு நடிகர் சூர்யா முதல் சித்தார்த் வரை பல பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து ட்வீட் போட்ட நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் படக்குழுவை அழைத்து பாராட்டி உள்ளார்.

Recommended Video

Maanaadu Review | Yessa ? Bussa ? | Silambarasan | S J Suryah | Venkat Prabhu | Filmibeat Tamil

சிம்பு நடிப்பில் கடந்த வியாழக் கிழமை வெளியான மாநாடு திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் தியேட்டருக்கு வருவதாக பல தியேட்டர் ஓனர்களே ட்வீட் போட்டு வருகின்றனர்.

தேவையான வெற்றி

தேவையான வெற்றி

இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு மங்காத்தா படத்திற்கு பிறகு மிகப்பெரிய வெற்றி தேவைப்பட்டது. அதே போல நடிகர் சிம்புவுக்கு நீண்ட வருடங்களாகவே ஒரு பெரிய வெற்றி தேவைப்பட்டது. இந்நிலையில், இருவரும் இணைந்து கடும் உழைப்பை போட்டு உருவாக்கிய மாநாடு திரைப்படம் இருவரும் எதிர்பார்த்த வெற்றியை பெற்றுள்ளது.

ரெட் கார்டு நீக்கம்

ரெட் கார்டு நீக்கம்

நடிகர் சிம்பு மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுக்களை அடுக்கி அவருக்கு தயாரிப்பு சங்கம் சார்பில் போடப்பட்ட ரெட் கார்டு சமீபத்தில் நீண்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு நீக்கப்பட்டது. ஆனாலும், மாநாடு திரைப்படம் வெளியாகவிருந்த நிலையில், மீண்டும் சில பிரச்சனைகள் கிளம்பி அந்த படத்திற்கு முட்டுக்கட்டையாக இருந்தது. ஆனால், கடைசியில் தடைகளை கடந்து மாநாடு வெளியானது.

ரஜினிகாந்த் பாராட்டு

ரஜினிகாந்த் பாராட்டு

மாநாடு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், நடிகர் சிம்பு மற்றும் இயக்குநர் வெங்கட் பிரபுவை அழைத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டி உள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் இது தொடர்பான ட்வீட்டை பதிவிட்ட வெங்கட் பிரபு மாநாடு பிளாக்பஸ்டர் என்ற ஹாஷ்டேக்கையும் சேர்த்து பதிவிட்டு தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

தயாரிப்பாளர் ஹேப்பி

தயாரிப்பாளர் ஹேப்பி

"இனிய நாளாக அமைந்து விட்டது இந்நாள். சூப்பர் ஸ்டாரின் அழைப்பும் பாராட்டும் இப்படத்தின் வெற்றியை உறுதி செய்திருக்கிறது.. நல்லதைத் தேடிப் பாராட்டும் இம்மனசே இன்னும் உங்களை உச்ச சிம்மாசனத்தில் உயர்த்தி வைத்திருக்கிறது. மிகுந்த பலம் பெற்றோம். ஒட்டுமொத்த படக்குழு சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.. மிக்க நன்றி சார்!" என சூப்பர் ஸ்டாருக்கு நன்றி கூறியுள்ளார் சுரேஷ் காமாட்சி.

ரஜினியை இயக்குவாரா வெங்கட் பிரபு

ரஜினியை இயக்குவாரா வெங்கட் பிரபு

தேசிங் பெரியசாமி, நெல்சன், கார்த்திக் சுப்புராஜ் மற்றும் பாண்டிராஜ் என அண்ணாத்த படத்துக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படத்தை இயக்கப் போகும் இயக்குநர் யார்? என்கிற கேள்வி எழுந்துள்ள நிலையில், வெங்கட் பிரபு ரஜினிகாந்த் காம்போ அமைந்தால் நல்லா இருக்கும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வெங்கட் பிரபுவின் ட்வீட்டுக்கு கீழே கமெண்ட் செய்து வருகின்றனர். மாநாடு படத்தின் வெற்றி வெங்கட் பிரபுவுக்கு அந்த வாய்ப்பை வழங்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X