»   »  ரசிகர்கள் சந்திப்பை தற்காலிகமாக ரத்து செய்தார் ரஜினி!

ரசிகர்கள் சந்திப்பை தற்காலிகமாக ரத்து செய்தார் ரஜினி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏப்ரல் 12 முதல் 16 வரை நடக்கவிருந்த பிரமாண்ட ரசிகர்கள் சந்திப்பை தற்காலிகமாக ரத்து செய்வதாக ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.

தகுந்த ஏற்பாடுகளுடன் விரைவில் சந்திப்புக்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Rajinikanth cancels fans meet

ரசிகர்கள் நீண்ட காலமாக தன்னைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கோரி வந்ததால், இந்த முறை அதை நிறைவேற்றும் வகையில் ரசிகர்ளை தொடர்ந்து 6 நாட்கள் சந்திக்க முடிவு செய்தார் ரஜினி.

ஒரு நாளைக்கு 2000 பேர்களுடன் நின்று படமெடுத்துக் கொள்ள ரஜினி முடிவு செய்தார். ஆனால் நடைமுறையில் ஒரு நாளைக்கு 2000 பேர்களுடன் தனித்தனியாக நின்று படமெடுத்துக் கொள்வது சாத்தியமா என்ற கேள்வி எழுந்ததாலும், அனைத்து தரப்பு ரசிகர்களுமே ரஜினியைச் சந்தித்து தனித்தனியாக படமெடுத்துக் கொள்ள விரும்பியதாலும் மாற்று ஏற்பாடுகளில் இறங்கியுள்ளார் ரஜினி.

எனவே தற்போது திட்டமிட்ட 6 நாட்கள் சந்திப்பை ரத்து செய்துள்ளார். சந்திப்புக்கான புதிய தேதியை விரைவில் அறிவிக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இது குறித்த ரஜினியின் அறிவிப்பு, அவரது வாய்ஸில்...

English summary
Rajinikanth has cancelled his meet with the fans due to some reasons.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil