47 ஆண்டுகால சினிமா ராஜ்ஜியம்.. வீட்டில் ரொம்ப எளிமையான கொண்டாட்டம்.. அதுதான் ரஜினி!

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தனது 47 ஆண்டுகால சினிமா வாழ்க்கையை வீட்டில் மிகவும் எளிமையாக கொண்டாடினார். அதன் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

அபூர்வ ராகங்கள் படத்தில் ஆரம்பித்த திரைப் பயணம் அண்ணாத்த படத்தை தாண்டி அடுத்ததாக ஜெயிலர் வரை சென்று கொண்டிருக்கிறது.

70 பிளஸ் வயதிலும் இன்னமும் அதே எனர்ஜி மற்றும் ஸ்டைலுடன் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

நடிக்க வந்த காலத்தில் இருந்து இப்ப வரைக்கும் 6ல் இருந்து 60 வரை அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து வருபவர் நடிகர் ரஜினிகாந்த். அவரது தனித்துவமான ஸ்டைலுக்கும் பஞ்ச் வசனங்களுக்காகவே அவரது படங்களை கொண்டாடும் ரசிகர்கள் ஏராளம். சர்வதேச அளவில் தமிழ் சினிமாவை கொண்டு சென்ற புகழ் நடிகர் ரஜினிக்கு அதிகமாகவே உள்ளது.

47 வருட ராஜாங்கம்

47 வருட ராஜாங்கம்

ரஜினிகாந்த் எனும் இந்த பாட்ஷாவின் ராஜாங்கம் தமிழ் சினிமா உலகில் 47 ஆண்டுகளாக கொஞ்சம் கூட குறையாமல் அதிகரித்த வண்ணமே உள்ளன. வெற்றி தோல்விகளை தாண்டி இந்த வயதிலும் எனர்ஜி குறையாமல் ஆக்‌ஷன், நடனம், நடிப்பு, காமெடி, சென்டிமென்ட் என கமர்ஷியல் படங்களை பக்காவாக கொடுத்து வருகிறார் ரஜினி.

வீட்டில் கொண்டாட்டம்

வீட்டில் கொண்டாட்டம்

மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஏற்பாடு செய்திருந்த 47 Years of Rajinism பேனரை வியப்பாக எளிமையான தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் பார்க்கும் புகைப்படங்களை அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் க்ளிக் செய்த நிலையில், அதை தனது சமூக வலைதள பக்கங்களில் அவர் பதிவிட்டுள்ளார்.

நெஞ்சில் தேசியக் கொடி

நெஞ்சில் தேசியக் கொடி

நடிகர் ரஜினிகாந்த் பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று தனது ட்விட்டர் பக்கத்தில் உள்ள புரொஃபைல் பிக்சரில் தேசியக் கொடியை வைத்தார். மேலும், தனது வீட்டில் 3 நாட்கள் தேசியக் கொடியை பறக்கவிட்டார். இந்நிலையில், சுதந்திர தனத்தன்று அப்பாவுக்கு மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கொடியை குத்தும் புகைப்படமும் தற்போது வெளியாகி உள்ளது.

Recommended Video

Sridevi-க்கு இப்படி ஒரு திறமையா, Untold story of Sridevi *Celebrity
ரசிகர்கள் கொண்டாட்டம்

ரசிகர்கள் கொண்டாட்டம்

நடிகர் ரஜினிகாந்த் தனது 47 ஆண்டு கால ரஜினிஸத்தை மிகப்பெரிய விழாவாக பிரம்மாண்டமாக எல்லாம் கொண்டாடாமல் எளிமையான முறையில் வீட்டில் தனது மகளுடன் கொண்டாடி இருப்பதை பார்த்து ரசிகர்கள் அதுதான் சார் ரஜினி என கொண்டாடி வருகின்றனர். விரைவில் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பில் ரஜினி பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X