»   »  கபாலி க்ளைமாக்ஸை மாற்றியது யார் தெரியுமா?

கபாலி க்ளைமாக்ஸை மாற்றியது யார் தெரியுமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

வேறு யாருமில்லை... சாட்சாத் ரஜினியேதான்...

கபாலி க்ளைமாக்ஸ் காட்சியில் இருந்து இன்னும் மீண்டு வந்திருக்க மாட்டார்கள் ரஜினி ரசிகர்கள். கபாலி சுடப்பட்டாரா? அல்லது கபாலி சுட்டாரா? அல்லது பக்கத்திலிருந்தவர்கள் சுட வந்தவனை போட்டுத் தள்ளினார்களா? என்ற கேள்வியோடே படத்தை முடித்துவிட்டார் இயக்குநர் ரஞ்சித்.


கபாலி சுடப்பட்டார் என்றால் இது நெகட்டிவ் க்ளைமாக்ஸ் ஆச்சே... ரசிகர்கள் எப்படி ஏற்பார்கள்?


ரஞ்சித்தே இதற்கான பதிலைச் சொன்னார்.


"முதலில் இந்த க்ளைமாக்ஸ் தான் இருந்தது. ஆனால் எடிட்டிங் முடித்து பார்த்தபோது நெகட்டிவா முடிக்க வேண்டாமே என்று பாசிட்டிவான க்ளைமாக்ஸை வைத்து விட்டோம்.


அமெரிக்காவில் இருந்து படத்தைப் பார்த்த ரஜினி சார் உடனே ஃபோன் அடித்துவிட்டார். ஏன் மாத்துனீங்க? கதையில ஹைலைட்டே அந்த க்ளைமாக்ஸ்தான். என் ரசிகர்கள் எப்படி இருந்தாலும் ஏத்துக்குவாங்க... அவர்களைப் பத்தி எனக்குத் தெரியும்..'' என்று நம்பிக்கை தந்திருக்கிறார்.


தலைவர் எந்த நம்பிக்கையில் சொன்னாரோ அந்த நம்பிக்கையை அப்படியே காப்பாற்றிவிட்டனர் அவரது ரசிகர்கள்... அதான் ரஜினிக்கும் அவர் ரசிகர்களுக்குமான புரிதல்!!

English summary
Director Ranjith says that Rajinikanth was changed the climax of Kabali.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil