»   »  "கண்டக்டர் டு சூப்பர்ஸ்டார்!" - ரஜினியின் சக்ஸஸ்ஃபுல் சினிமா பயணம்

"கண்டக்டர் டு சூப்பர்ஸ்டார்!" - ரஜினியின் சக்ஸஸ்ஃபுல் சினிமா பயணம்

Subscribe to Oneindia Tamil

சென்னை : கண்டக்டராக இருந்து பாலச்சந்தரால் கண்டெடுக்கப்பட்டு தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்ட ரஜினிகாந்த் இப்போது தமிழ் திரையுலகின் சூப்பர்ஸ்டாராக வளர்ந்து நிற்கிறார்.

இந்த வெற்றி ஒன்றும் ஒரு இரவில் கிடைத்ததல்ல. நடிக்க வாய்ப்புக் கிடைத்த கிடைத்த படங்களையெல்லாம் தன் அடையாளத்திற்கானவைகளாக்கி ரஜினிகாந்த் வென்ற சினிமா சரித்திரம் இது.

ஒரு புள்ளியில் தொடங்கிய ரஜினிகாந்தின் சினிமா பயணம், இப்போது உலகம் முழுவதும் ரசிகர்களைப் பெறும் அளவிற்கு வளர்ந்திருக்கிறது. இத்தனைக்கும் தகுதியான அந்த மனிதர் எளிமையின் இன்னொரு வடிவம்.

ரஜினி இளம் வயது

ரஜினி இளம் வயது

மராத்தி குடும்பத்தில் பிறந்த ரஜினி பெங்களூரில் பள்ளிப் படிப்பு படித்தவர். படிப்பு முடித்ததும் பஸ் கண்டக்டராகவும், சில மேடை நாடகங்களில் நடிகராகவும் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தவர் இப்போதிருக்கும் உயரத்தை நிச்சயம் அப்போது நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். நடிப்பின் மீது கொண்ட ஆர்வத்தால் சென்னைக்கு வண்டி ஏறிய ரஜினி தனது நண்பரின் துணையோடு சென்னை திரைப்படக் கல்லூரியில் சேர்ந்தார்.

பாலச்சந்தர் கண்ணில் பட்ட ரஜினி

பாலச்சந்தர் கண்ணில் பட்ட ரஜினி

பாலச்சந்தரின் கண்ணில் பட்டு அவர் இயக்கிய 'அபூர்வ ராகங்கள்' படத்தில் சிறிய வேடத்தில் அறிமுகமானார் இன்றைய சூப்பர்ஸ்டார். 1976-ல் பாலச்சந்தர் இயக்கிய 'மூன்று முடிச்சு' திரைப்படம் ரஜினியை நல்ல நடிகராக அறியவைத்தது. 'அபூர்வ ராகங்கள்' படத்தில் சிகரெட்டை தூக்கிப் போட்டு வாய்க்குக் கொண்டுவரும் ஸ்டைலை அறிமுகப்படுத்தி அன்றைய இளைஞர்களின் ஏகபோக வரவேற்பைப் பெற்றார்.

 ரஜினி ஸ்டைல்

ரஜினி ஸ்டைல்

ரஜினி என்றாலே ஸ்டைல் எனும் நிலை உருவாகும் அளவுக்கு பல படங்களில் தனித்துவமான ஸ்டைலால் மக்களைக் கவர்ந்தார். '16 வயதினிலே' படத்தில் பரட்டை எனும் வில்லன் கேரக்டர் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தார். ரஜினியின் 'இது எப்டி இருக்கு' வசனம் இத்தனையாண்டுகள் கழித்தும் நினைவுகூரப்படுவதே அவரது நடிப்புக்கான வெற்றி என்று கூறலாம். நடிப்பின் மீதான அவரது அபிமானமே அவரை மாபெரும் நடிகராக வளர்த்தெடுத்தது.

நாயகனாக ரஜினி

நாயகனாக ரஜினி

1977-ம் ஆண்டில் ரஜினி 'புவனா ஒரு கேள்விக்குறி' படத்தில் நாயகனாக அறிமுகமானார். அந்தப் படத்தின் வெற்றி அவருக்கு ஏறுமுகத்தைத் தொடங்கி வைத்தது. அதைத் தொடர்ந்து 'முள்ளும் மலரும்', 'ஆறிலிருந்து அறுபது வரை' ஆகிய படங்களில் நடித்துப் பெரிய வெற்றியைப் பெற்றார். 'பில்லா', 'போக்கிரி ராஜா', 'முரட்டுக்காளை' ஆகிய படங்களில் ஆக்‌ஷன் அவதாரம் எடுத்து செம கலக்கு கலக்கியிருப்பார்.

சினிமாவில் மைல்கல்

சினிமாவில் மைல்கல்

'மீசை இருந்தா சந்திரன்' மீசை இல்லாட்டி இந்திரன்' என வெரைட்டி விருந்து படைத்த 'தில்லுமுல்லு' படத்தில் காமெடி ஹீரோவாக ரவுசு செய்திருப்பார் ரஜினிகாந்த். 'தர்மத்தின் தலைவன்', 'மூன்று முகம்' ஆகிய படங்களும் அவரது திரைப் பயணத்தில் குறிப்பிடத்தக்க மிகப்பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தன. 1985-ம் ஆண்டில் தனது நூறாவது படமான 'ராகவேந்திரா'வில் நடித்து புதிய மைல்கல்லைக் கடந்தார்.

வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்

வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்

'மாவீரன்', 'தர்மத்தின் தலைவன்', 'மாப்பிள்ளை' உள்ளிட்ட பல படங்கள் மிகப்பெரும் வெற்றியைக் கொடுத்து உச்ச நட்சத்திரமாக நிலை நாட்டின. தொண்ணூறுகளில் வெளிவந்த 'தர்மதுரை', 'தளபதி', 'மன்னன்', 'அண்ணாமலை' 'பாட்ஷா', 'அருணாசலம்', 'படையப்பா' ஆகிய படங்கள் வெறித்தன ஹிட் அடித்து தமித் திரையுலகின் சூப்பர்ஸ்டார் எனும் பட்டத்தைப் பெற்றுத்தந்தன. ரஜினி பெயரை டைட்டில் கார்டில் போட்டால் தியேட்டரே தெறிக்கும் அளவுக்கு விசில் பறந்தது. "எப்ப வருவேன்? எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது, ஆனா வரவேண்டிய நேரத்துல கரக்டா வருவேன்." என்கிற வசனம் அவரது அரசியல் பிரவேசத்துக்கான அறிகுறியாகவே பார்க்கப்பட்டது.

உலகம் முழுக்க ரசிகர்கள்

உலகம் முழுக்க ரசிகர்கள்

1995-ம் ஆண்டு வெளிவந்த 'முத்து' திரைப்படம் தமிழில் பெருவெற்றி பெற்றதோடு ஜப்பான் மொழியிலும் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டது. ஜப்பானிய மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்ட முதல் தமிழ்ப் படம் எனும் சிறப்பு பெற்ற 'முத்து' அங்கும் தெறி ஹிட் ஆகி ரஜினிக்கு இருக்கும் ரசிகர்களின் ஆதரவை உரக்கச் சொல்லியது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான 'பாபா' ரசிகர்களை ஏமாற்றியது. ஆனாலும், அதில் அவர் பேசிய 'நான் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன்' என்கிற வசனம் ரசிகர்களுக்கான அவரது அறிவிப்பாகவே எடுத்துக் கொள்ளப்பட்டது.

உச்ச நட்சத்திரம்

உச்ச நட்சத்திரம்

பி.வாசு இயக்கத்தில் 'சந்திரமுகி' படம் பல திரையரங்குகளில் வெள்ளி விழா கொண்டாடியது. ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த 'சிவாஜி' படமும், 'எந்திரன்' படமும் உலகம் முழுதும் வெளியாகி வசூல் சாதனை படைத்தன. 'கபாலி' படத்தில் மிரட்டலாக நடித்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றினார். என்றைக்கும் சூப்பர்ஸ்டாராக விளங்கும் ரஜினி இப்போது எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான '2.ஓ' படத்திலும் 'காலா' படத்திலும் நடித்துவிட்டு ரிலீஸுக்காக காத்திருக்கிறார்.

தலைவன்

தலைவன்

ஆனால், அவரது அரசியல் என்ட்ரிக்காக அவரது பெரும் ரசிகர் படை காத்திருக்கிறது. 'வருவது வரட்டும்; நீ வா தலைவா' என உணர்ச்சி பொங்க கோஷமெழுப்பி வருகிறார்கள் அவரது லட்சக்கணக்கான ரசிகர்கள். இப்போது கடந்த ஒரு வாரமாக தமிழ்நாட்டின் பல பகுதிகளைச் சேர்ந்த ரசிகர்களையும் சந்தித்து வருகிறார் ரஜினி. அவர்கள் அத்தனை பேரின் கோரிக்கையும் 'தலைவன்' எனும் ஒற்றைக் குரலாகத்தான் ஒலிக்கிறது.

ரஜினியின் அந்த அறிவிப்பு

ரஜினியின் அந்த அறிவிப்பு

விருதுகளால் இனி ரஜினிக்குப் பெருமை இல்லை; ரஜினியால் விருதுகள் பெருமைகொள்ளும் காலமும் வந்துவிட்டது. இத்தனை வருடங்களாக மக்கள் மனதில் சூப்பர்ஸ்டாராக வாழ்ந்தவர் மக்களின் தலைவனாக உருவாக வேண்டும் என நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள் ரசிகர் மன்றத்தினர். ரஜினிகாந்த் அறிவிக்கப்போகும் அறிவிப்புதான் ரசிகர்களின் நம்பிக்கையில் ஒளியேற்றப் போகிறது.

போருக்கு வா தலைவா!

போருக்கு வா தலைவா!

"விட்டகுறை தொட்டகுறை உனக்காக காத்திருக்கோம்.. ஒரு வார்த்தை நீ சொல்லிப்புட்டா தமிழ்நாடே தூள் பறக்கும்! ரெண்டில் ஒண்ணு பார்த்திடலாம்... களத்துக்கு வா தலைவா! கொண்டு வந்ததெதுவுமில்ல... கொண்டுபோக எதுவும் இல்ல... தலைவா தலைவா... நீ போருக்கு வா..!" என முழங்குகிறார்கள் தலைவரின் தளபதிகள். அவர் சொன்ன போர் முரசு அவர் வார்த்தைகளில் இருந்து வெளிவரும் என நம்பிக்கையோடு எதிர்பார்க்கிறார்கள். ரஜினி வருவாரா?

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Superstar Rajinikanth is a legendary artist of tamil cinema. He was introduced by K.Balachandar in the film 'Apoorva ragangal'. He made his career successfully by his ultimate performances. Now, Rajinikanth is an icon of Indian cinema.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more