ஜெயிலர் படத்திற்கு இப்படி ஒரு அப்டேட்டா...குஷியான ரசிகர்கள்
சென்னை :அண்ணாத்த படத்தை தொடர்ந்து மீண்டும் ரஜினி நடிக்கும் படத்தை தயாரிக்க போவதாகவும், டைரக்டர் நெல்சன் திலீப்குமார் இந்த படத்தை தயாரிக்க உள்ளதாகவும் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சன் பிக்சர்ஸ் அறிவித்தது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.

ஆனால் தற்போது வரை இந்த படத்தின் ஷுட்டிங் துவங்கப்படவில்லை. இதனால் பல வதந்திகள் தொடர்ந்து பரவி வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் ரஜினியின் புதிய படமான, தலைவர் 169 என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருந்த இந்த படத்திற்கு ஜெயிலர் என டைட்டில் வைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
Recommended Video
அதற்கு பிறகு படக்குழு சார்பில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், ஜெயிலர் படத்தின் ஷுட்டிங் ஆகஸ்ட் 3 ம் தேதி, ஐதராபாத்தில் பூஜையுடன் துவங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதல் கட்ட ஷுட்டிங்கிற்காக ஐதராபாத்தில் செட் அமைக்கும் பணி முடிந்து விட்டதாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில் மற்றொரு தகவலாக,ஜெயிலர் படத்திற்கான டெஸ்ட் ஷுட் மற்றும் முக்கிய கேரக்டர்களுக்கான தேர்வு சென்னையில் நேற்று நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதில் கலந்து கொண்டு ஜெயிலர் படத்திற்கான டெஸ்ட் ஷுட்டை ரஜினிகாந்த் முடித்து விட்டதாக சொல்லப்படுகிறது.
ஜெயிலர் படத்தின் பெரும்பாலான சீன்கள் ஐதராபாத்தில் தான் எடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதோடு ஜெயிலர் படத்திற்கான கதையை நெல்சன் தயார் செய்து முடித்து விட்டதாக சொல்லப்படுகிறது. அதோடு இது நெல்சனின் முந்தைய படங்களை போல் இல்லாமல், முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
மற்றொரு புறம் ஜெயிலர் படத்திற்கான கதை தயார் செய்யும் பொறுப்பு முழுவதையும் நெசனிடமே, ரஜினிகாந்த் ஒப்படைத்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது. அதே போல் கேரக்டர்களுக்கு பொருத்த நடிகர் - நடிகைகள் தேர்விற்கான முழு பொறுப்பையும் நெல்சனிடமே ரஜினி விட்டு விட்டதாக சொல்லப்படுகிறது.
இதுவரை கிடைத்துள்ள தகவல்களின்படி, ஜெயிலர் படத்தில் முக்கிய ரோல்களில் நடிக்க ஐஸ்வர்யா ராய், சிவ ராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா மோகன் ஆகியோர் முக்கிய கேரக்டர்களுக்கு தேர்வு வைக்கப்பட்டு உள்ளதாக சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











