நீ இல்லை என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை புனீத்.. நடிகர் ரஜினிகாந்த் உருக்கம்!

சென்னை: பிரபல கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார் மறைவுக்கு உருக்கமான பதிவை ஹூட் ஆப்பில் நடிகர் ரஜினிகாந்த் பதிவிட்டுள்ளார்.

Recommended Video

Puneeth என் கண் முன்னாடி வளர்ந்த குழந்தை Superstar Rajinikanth Emotional

உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் இருந்த போது தான் கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக காலமானார்.

இந்நிலையில், புனீத் ராஜ்குமார் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

புனீத் ராஜ்குமார் மறைவு

புனீத் ராஜ்குமார் மறைவு

கடந்த அக்டோபர் 29ம் தேதி திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக பிரபல கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார் காலமானார். அவருக்கு வயது 46. கன்னட திரையுலகின் பவர் ஸ்டாராக கலக்கி வந்த புனீத் ராஜ்குமார் திடீரென உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

மருத்துவமனையில் ரஜினி

மருத்துவமனையில் ரஜினி

புனீத் ராஜ்குமார் உயிரிழந்த தருணத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பூரண நலத்துடன் நடிகர் ரஜினிகாந்த் விரைவில் வீடு திரும்ப வேண்டும் என ஏகப்பட்ட ரசிகர்களும் பிரபலங்களும் பிரார்த்தனை செய்த நிலையில், ஓரிரு நாட்களில் வீடு திரும்பினார் ரஜினிகாந்த்.

சிறிது ஓய்வு

சிறிது ஓய்வு

அண்ணாத்த படத்தின் ரிலீஸ் மற்றும் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை கூட கொண்டாட முடியாத அளவுக்கு உடல் நலக் குறைவு காரணமாக சிறிது ஓய்வெடுத்து வந்த நடிகர் ரஜினிகாந்த் தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாகியுள்ளார்.

ரஜினிகாந்த் இரங்கல்

ரஜினிகாந்த் இரங்கல்

இந்நிலையில், ஹூட் செயலி மூலம் குரல் பதிவாக புனீத் ராஜ்குமாரின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அந்த லிங்கை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்த ரஜினிகாந்த், "நீ இல்லை என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை புனீத் Rest in peace my child" என உருக்கமாக பதிவு செய்துள்ளார்.

பிரபலங்கள் அஞ்சலி

பிரபலங்கள் அஞ்சலி

புனீத் ராஜ்குமாரின் இறுதி ஊர்வலத்தில் ஜூனியர் என்.டி.ஆர், நடிகர் யஷ் உள்ளிட்ட ஏகப்பட்ட திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். நடிகர் சிவகார்த்திகேயன், சூர்யா, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் அவரது நினைவிடத்துக்கு சென்று மலர் தூவி அஞ்சலி செலுத்தி உள்ளனர். கன்னட ரசிகர்கள் தொடர்ந்து புனீத் ராஜ்குமாரின் மறைவை தாங்க முடியாமல் சோகத்தில் ஆழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X