»   »  ரஜினி, சர்ச்சைகள், இழப்புகள்: 2014ல் தமிழ் சினிமா கடந்து வந்த பாதை ஒரு ஃபிளாஷ்பேக்

ரஜினி, சர்ச்சைகள், இழப்புகள்: 2014ல் தமிழ் சினிமா கடந்து வந்த பாதை ஒரு ஃபிளாஷ்பேக்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 4 ஆண்டுகள் கழித்து ரஜினிகாந்த் மீண்டும் நடிக்க வந்தது, பிரச்சனைக்குப் பிறகு வெளியான விஜய்யின் படம் மற்றும் பேய் படங்கள் வெற்றி பெற்றது ஆகியவை தான் இந்த ஆண்டு தமிழ் திரை உலகின் முக்கிய செய்திகளாக உள்ளன.

2014ம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ளன. இந்த ஆண்டில் தமிழ் திரை உலகில் பல வெற்றிகள், சோகங்கள், பிரச்சனைகள் இருந்துள்ளன. இந்நிலையில் தமிழ் சினிமா இந்த ஆண்டு கடந்து வந்த பாதையை பார்க்கலாம்.

அது குறித்த விவரம் வருமாறு,

ரஜினி

ரஜினி

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்ன தான் கோச்சடையானில் நடித்தாலும் அது அனிமேஷன் என்பதால் அதை ரசிகர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்நிலையில் தான் 4 ஆண்டுகள் கழித்து அவர் நடித்த லிங்கா படம் கடந்த 12ம் தேதி ரிலீஸானது.

கத்தி

கத்தி

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி படம் அதன் தயாரிப்பாளரான லைக்கா நிறுவனத்தால் பெரும் பிரச்சனையில் சிக்கியது. இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு நெருக்கமான ஒருவர் தயாரித்துள்ள படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று சில தமிழ் அமைப்புகள் போர்க்கொடி தூக்கின. பின்னர் லைக்கா நிறுவனத்தின் பெயரை படத்தில் இருந்து நீக்க சம்மதித்த பிறகே ஒரு வழியாக படம் ரிலீஸானது.

கமல்

கமல்

இந்த ஆண்டு உலக நாயகன் கமல் ஹாஸனின் ஒரு படம் கூட ரிலீஸாகவில்லை. ஆனால் அடுத்த ஆண்டு அவர் நடிப்பில் பாபநாசம், உத்தமவில்லன், விஸ்வரூபம் 2 ஆகிய படங்கள் ரிலீஸாக உள்ளன.

மரணம்

மரணம்

பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரன் மற்றும் இயக்குனர் பாலு மகேந்திரா ஆகியோர் மரணம் அடைந்தனர். அவர்களின் மரணம் தமிழ் திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.

ஜெயலலிதா

ஜெயலலிதா

சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு தண்டனை கிடைத்ததை எதிர்த்து தமிழ் திரை உலகினர் ஒரு நாள் உண்ணாவிரதம் இருந்தனர். ஆனால் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் ரஜினி, கமல், அஜீத், விஜய் ஆகிய நான்கு முக்கிய நடிகர்கள் கலந்து கொள்ளவில்லை.

பேய்

பேய்

2014ம் ஆண்டு தமிழ் ரசிகர்களை அதிகம் ஈர்த்தது பேய் படங்கள் தான். இதனால் பேய் படங்கள் பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூல் செய்தன.

English summary
Superstar Rajinikanth's comeback after a gap of four years, actor Vijay's problem-laced releases and the horror genre were the highlight of the Tamil film industry this year.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil