Coolie 10th Day Box Office: கூலி 10வது நாள் வசூல்.. வீக் எண்டில் குறையாத மவுசு..

சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 14ஆம் தேதி வெளியான படம் கூலி. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, லோகேஷ் கனகராஜ் இயக்கினார். இந்த படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 171வது படம். அனிருத் இசையில் உருவான இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. குறிப்பாக படம் தமிழ் சினிமாவில் ரூபாய் 1000 கோடிகள் வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் படம் விமர்சன ரீதியாக வாங்கிய தர்ம அடியைப் பார்த்ததும், 1000 கோடிக்கு வாய்ப்பில்லை, எவ்வளவு வசூல் ஆகுதுன்னு பார்க்கலாம் என்ற மனநிலைக்கு ரசிகர்கள் வந்துவிட்டார்கள். அப்படி இருக்கும்போது படத்தின் 10வது நாள் வசூல் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

ரஜினி திரைவாழ்க்கையில் 50 வது ஆண்டை இந்த கடந்த 15ஆம் தேதி நிறைவு செய்தார். 1975ஆம் ஆண்டு மறைந்த இயக்குநர் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் உருவாகி வெளியான அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். இப்படி இருக்கும்போது, கடந்த 15 ஆம் தேதியுடன் திரைவாழ்க்கையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதற்காக பிரதமர் தொடங்கி முதலமைச்சர் என இந்தியா முழுவதும் உள்ள பல முக்கிய புள்ளிகள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Rajinikanth Coolie Day 10 Weekend Box Office Collection Just 10 Cr Details Here
Photo Credit:

ஏமாற்றம்: அவரது 50 வது ஆண்டு திரை வாழ்க்கையில் வெளியான கூலி படத்தின் மீது பெரும் நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் இருந்தது. ஆனால், படம் திரைக்கதை ரீதியாக மிகப்பெரிய தோல்வி படமாக மாறிவிட்டது. படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பால், ரசிகர்கள் முதல் நான்கு நாட்களுக்கு முன் பதிவு செய்து வைத்திருந்தார்கள். ஆனால் படம் கொடுத்த ஏமாற்றத்தால், பலர் சமூக வலைதளத்தில் தாங்கள் இரண்டாவது முறை பார்க்க முன்பதிவு செய்து வைத்திருந்த டிக்கெட்டுகளை விற்பனை செய்த சம்பவங்கள் எல்லாம் அரங்கேறியது.

வசூல் வெற்றி: முன்பதிவு என்ற ஆப்ஷன் இருப்பதால் கூலி படம் தப்பித்து விட்டது என்று கூறும் அளவுக்கு படம் இருந்தது. வணிக ரீதியாக படத்தின் முதல் நான்கு நாட்கள் வசூல் என்பது ரூபாய் 404 கோடிகள் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மேலும் முதல் நாளிலேயே ரூபாய் 151 கோடிகளை வசூல் செய்து, தமிழ் சினிமாவில் முதம் நாளில் அதிக வசூல் குவித்த படம் என்ற சாதனையைப் படைத்தது. அதேபோல்தான் முதல் நான்கு நாள் வசூலும் சாதனை பட்டியலில் இடம்பிடித்தது.

Rajinikanth Coolie Day 10 Weekend Box Office Collection Just 10 Cr Details Here
Photo Credit:

10 நாள் வசூல்: இந்நிலையில் நேற்றுடன் அதாவது ஆகஸ்ட் 23ஆம் தேதியுடன் கூலி படம் வெளியாகி 10 நாட்கள் ஆகிறது. இதில் முதல் 9 நாளில் இந்தியாவில் மட்டும் படம் சுமார் ரூபாய் 235.5 கோடிகள் வசூல் செய்ததாக சாக்நிக் வலைதளம் தெரிவித்துள்ளது. இதில் 10வது நாளான நேற்று படம் ரூபாய் 10 கோடிகள் வசூலித்திருக்க கூடும் எனவும் சாக்நிக் வலைதளம் தெரிவித்துள்ளது. இந்தத் தரவுகளின் படி படம் முதல் 10 நாட்களில் ரூபாய் 245.5 கோடிகள் இந்தியாவில் வசூலித்துள்ளது. வார நாட்களில் குறைவாக வசூலித்துக் கொண்டு இருந்த கூலி படம், வார இறுதியில் ரூபாய் 10 கோடிகளை வசூலித்துள்ளது. இந்த வசூல் இன்றும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X