Coolie 13 Day Box Office: தலைவரின் கூலி 13வது நாள் வசூல்..
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி கடந்த 14ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியான படம் கூலி. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. படத்திற்கு அனிருத் இசையமைத்திருதார். படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியானது. ஆனால் படம் விமர்சன ரீதியாக அடி மேல் அடி வாங்க, வசூலில் ஐந்தாவது நாளில் இருந்து சொதப்பியது. இந்நிலையில் முதல் 13 நாட்கள் வசூல் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்பவரே உச்ச நட்சத்திரம். அவருக்காகவே படம் வேற லெவலில் ஓடும். கூலி படத்தில் ரஜினியுடன் சத்யராஜ், நாகர்ஜுனா, ஆமிர் கான், ஸ்ருதி ஹாசன், சௌபின் சாஹிர், உபேந்திரா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்ததால் படத்தின் மீது ஹைப் எகிறியது. ஆனால் படத்தில் லாஜிக் இல்லாத திரைக்கதையால் படத்தை ரசிகர்கள் தொடங்கி இணையவாசிகள் வரை பலரும் படத்தை போட்டு தவிடுபொடியாக்கி விட்டார்கள்.
இந்நிலையில் படம் முதல் நான்கு நாட்களில் சுமார் 404 கோடிகள் உலகம் முழுவதும் வசூல் செய்ததாக படக்குழு தெரிவித்தது. இந்த முதல் நான்கு நாட்கள் வசூல் என்பது, பெரும்பாலும் ப்ரீ புக்கிங்கில் வசூல் ஆனதுதான். படம் விமர்சன ரீதியாக அடி வாங்கத் தொடங்கியதால், முதல் வார இறுதிக்குப் பின்னர் ரசிகர்கள் தியேட்டர் பக்கம் எட்டியே பார்க்கவில்லை என்று கூறும் அளவுக்கு வசூல் உள்ளது.

ரசிகர்கள் சைலண்ட்: தமிழ்நாட்டில் படம் சுத்தமாக எடுபடவில்லை. ரஜினியின் 50 ஆண்டு திரை வாழ்க்கையில் வெளியான இந்த படத்தின் மீது அவரது ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தார்கள். அப்படி இருக்கும்போது, படம் திரைக்கதையாக சொதப்பியதால், ரசிகர்களே அமைதியாகி விட்டார்கள்.
வசூல்: படத்தைப் பொறுத்தவரை நேற்றுடன் அதாவது ஆகஸ்ட் 26 ஆம் தேதியுடன் 13 நாட்கள் ஆகிறது. இந்த 13 நாட்களில் படம் இந்தியா முழுவதும் ரூபாய் 263.85 கோடிகள் வசூல் செய்துள்ளது என்று சாக்நிக் வலைதளம் தெரிவித்துள்ளது. இதில் 13வது நாளில் இந்தியாவில் மட்டும் ரூபாய் 3.25 கோடிகள் வரை வசூலித்திருக்கும் என்று கூறப்படுகிறது. இது அதிகாரப்பூர்வ வசூல் கணக்கு இல்லை என்றாலும், சாக்நிக் வலைதளத்தின் தோராய கணக்கு என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இந்தக் கணக்குப்படி பார்த்தால் படம் உலகம் முழுவதும் சுமார் ரூபாய் 460 கோடிகள் முதல் ரூபாய் 460 கோடிகள் வரை வசூலித்திருக்கும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











