Coolie 14th Day Box Office: கூலி 14வது நாள் வசூல்.. தலைவருக்கு கைகொடுத்ததா விநாயகர் சதுர்த்தி?
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி கடந்த 14ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் கூலி. சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் எழுதி இயக்கிய இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்படி இருக்கையில், படம் வெளியாகி நேற்றுடன் அதாவது, ஆகஸ்ட் 27 ஆம் தேதியுடன் 14 நாட்கள் ஆகிறது. இதில் நேற்று விநாயகர் சதுர்த்தி விடுமுறை என்பதால், விடுமுறை தினத்தில் படத்தின் வசூல் எந்த அளவுக்கு இருந்தது இந்நிலையில் முதல் 14 நாட்களில் படத்தின் வசூல் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.
ரஜினிகாந்த் கடந்த 1975 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியான அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார். அவர் சினிமாவில் காலடி எடுத்து வைத்து 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். அப்படி இருக்கையில், அவரது 50 வது ஆண்டு நிறைவுக்கு வெளியான படம் கூலி. கூலி படத்தின் மீது ரசிகர்களுக்கு இயல்பாகவே எதிர்பார்ப்பு எகிறி விட்டது. ரஜினியின் 50 ஆண்டு நிறைவு விழாவில் வெளியாகிறது என்பதால் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்தது.

படத்திற்கு உலக அளவில் விளம்பரம் தேடிக் கொடுத்தது மோனிகா பாடல். படத்தின் அறிவிப்பே செம மாஸாக இருந்ததால் படம், தமிழ் சினிமாவில் 1000 கோடிகளை வசூலிக்கும் முதல் படமாக இருக்கும் என பலரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருந்தார்கள். படம் ஆகஸ்ட் 14ஆம் தேதி ரிலீஸ் ஆனது. அன்றைய தினம் வியாழக்கிழமை என்பதால் அந்த வார இறுதி வரை சேர்த்து படம் முதல் நான்கு நாட்களில் ரூபாய் 404 கோடிகளை வசூலித்ததாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது.
வசூல் சாதனை: முதல் நாளில் படம் ரூபாய் 151 கோடிகளை வசூலித்து, தமிழ் சினிமாவில் முதல் நாளில் அதிக வசூலைக் குவித்த படம் என்ற சாதனையைப் படைத்தது. அதேபோலத்தான், முதல் நான்கு நாட்களில் ரூபாய் 404 கோடிகளை வசூலித்து முதல் நான்கு நாட்களில் அதிக வசூலை அள்ளிய தமிழ் படம் என்ற சாதனையையும் படைத்துள்ளது.

கலவையான விமர்சனம்: படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. குறிப்பாக ரசிகர்கள் பலரும் படத்தில் அதிகப்படியான ஸ்டார்களை வைத்து படத்தை தேத்தி விடலாம் என்று நினைத்து உள்ளார்கள். ஆனால் படத்தில் திரைக்கதையாக பல சொதப்பல்கள் உள்ளது என்று பலரும் கருத்து தெரிவித்தனர். இதனால் படத்திற்கு 5வது நாளில் இருந்து அதாவது வார நாட்களில் வசூல் குறையத் தொடங்கியது.
இரண்டு வார வசூல்: படம் வெளியாகி நேற்றுடன் 14 நாட்கள் ஆகிறது. அதாவது, இரண்டு வாரங்கள் முழுவதுமாக முடிந்துவிட்டது. இந்த 14 நாட்களில் படம் இந்தியாவில் மட்டும் சுமார், ரூபாய் 268.75 கோடிகள் வசூலித்துள்ளது என்று சாக் நிக் வலைதளம் தெரிவித்துள்ளது. விநாயகர் சதுர்த்தி விடுமுறை தினமான நேற்று படம் சுமார் ரூபாய் 4.5 கோடிகள் வசூலித்திருக்கும் என்று கூறப்படுகிறது. படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் குறித்து, முதல் நான்கு நாட்களுக்கு பின்னர் படக்குழு எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.


Click it and Unblock the Notifications











