Coolie Box Office: விமர்சனங்களை கடந்து விஸ்வரூப வெற்றி.. சன்டே வரை ஹவுஸ்ஃபுல்.. கூலி 2வது நாள் வசூல்

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 14ஆம் தேதி வெளியான கூலி படத்திற்கு ரஜினி ரசிகர்களே சிலர் என்ன சொல்வது எனத் தெரியாமல் அமைதியாக இருக்கிறார்கள். காரணம், படத்தின் திரைக்கதையில் ஏகப்பட்ட சொதப்பல். இப்படி இருக்கும்போது முதல் நாளில் படம் உலகம் முழுவதும் ரூபாய் 151 கோடிகள் வசூல் குவித்து சாதனை படைத்தது. இந்நிலையில் படத்தின் இரண்டாவது நாள் வசூல் குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான கூலி படம் ரஜினியின் 171வது படம். மேலும் அவரது 50 ஆண்டுகள் திரை வாழ்க்கை நிறைவு பெறும் காலகட்டத்தில் இந்த படம் வெளியாகியுள்ளது. படம் அறிவிக்கப்பட்ட தினத்தில் இருந்தே ரசிகர்களுக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு. எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்ததா என்றால், கொஞ்சமும் இல்லை. ரஜினியை தவிர படத்தில் ஒன்றுமே இல்லை என விமர்சித்த ரசிகர்களும் உள்ளார்கள்.

Rajinikanth Coolie Movie Hits Day 2 Box Office Collection Deatils Here
Photo Credit:

படத்திற்கு உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இப்படி இருக்கையில் ரஜினியின் கூலி படத்திற்கு நாளை வரை பல தியேட்டர்களில் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாகத்தான் உள்ளது. பெரும்பான்மையான தியேட்டர்களில் அனைத்து காட்சிகளுக்கும் புக்கிங் தொடங்கிய தினத்திலேயே அனைத்து டிக்கெட்டுகளும் புக் ஆகிவிட்டது.

வசூல் மழை: படம் முதல் நாளில் ரூபாய் 151 கோடிகளுக்கு மேல் வசூல் செய்ததாக படக்குழு அறிவித்தது. இதன் மூலம் தமிழ் சினிமாவில் முதல் நாளில் அதிக வசூலை அள்ளிய படம் என்ற சாதனையை கூலி பிடித்தது. இதற்கு முன்னர், விஜய்யின் லியோ படம் ரூபாய் 148.5 கோடிகளாக இருந்தது. படத்திற்கான விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும், வசூலில் எந்தவிதமான குறையும் இல்லாமல் போய்க்கொண்டு உள்ளது. படம் இரண்டாவது நாளில் இந்தியாவில் மட்டும் ரூபாய் 53 கோடிகள் வசூலித்திருக்கும் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Rajinikanth Coolie Movie Hits Day 2 Box Office Collection Deatils Here
Photo Credit:

எதிர்பார்ப்பு: இது மட்டும் இல்லாமல் உலக அளவில் படம் ரூபாய் 100 கோடிகளை நெருங்கும் அளவுக்கு வசூலித்திருக்கும் எனவும் கூறப்படுகிறது. இதனால் படம் இரண்டு நாளில் கிட்டத்தட்ட 250 கோடிகளை வசூலித்திருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வார இறுதிக்குள் அதாவது ஞாயிற்றுக் கிழமை வரை உலகம் முழுவதும் படம் மொத்தமாக சுமார் ரூபாய் 400 கோடிகள் முதல் ரூபாய் 425 கோடிகள் வரை வசூலிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X