Coolie Box Office: பாக்ஸ் ஆபிஸில் தலைவர் சொல்றதுதான் ரூல்ஸ்.. கூலியின் 3 நாள் கூலி எத்தனை கோடிகள் தெரியுமா?
சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் கூலி. கடந்த 14ஆம் தேதி ரிலீஸ் ஆன இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்றால் கொஞ்சம் கூட இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும். விமர்சன ரீதியாக வெற்றியைத் தவறவிட்ட கூலி, வசூலில் நாளுக்கு நாள் எகிறி வருகிறது.
திரைவாழ்க்கையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்க்கு பொன் விழா ஆண்டில் வெளியான படம் தான் கூலி. பான் இந்தியா அளவில் படத்தை பெரிய ஹிட் படமாக மாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்ட இந்த படத்திற்கு, பான் இந்தியா அளவில் இருக்கும் நடிகர்கள்தான் படத்திற்குள் இருந்தார்களே தவிர, பான் இந்தியா அளவுக்கான கதை கொஞ்சம் கூட இல்லை. இதனால் படம் பரவலாகவே பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.

எதிர்பார்ப்பு: லோகேஷ் கனகராஜ் + ரஜினிகாந்த்+ அனிருத் கூட்டணியின் மீது இருந்த நம்பிக்கையால், இன்று வரை அதாவது ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை தமிழ் நாடு மட்டும் இல்லாமல், பல்வேறு மாநிலங்களிலும் பல காட்சிகளுக்கு 90 சதவீதம் டிக்கெட்டுகள் புக் ஆகிவிட்டது. இதனால் படம் ரிலீஸ் ஆன நாளில் இருந்து முதல் நான்கு நாட்களுக்கு வசூலில் தொய்வில்லாமல் பாக்ஸ் ஆபிஸை நிரப்பிக் கொண்டு உள்ளது. இதனால் தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல், ரஜினியின் தனிப்பட்ட பட வரிசைகளிலும் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் மீது ஹிட் அடித்துக் கொண்டு உள்ளது.
வசூல் விபரம்: படம் முதல் நாளில் ரூபாய் 151 கோடிகள் வசூல் செய்ததாக படக்குழுவே அறிவித்தது. இது தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு படம் முதல் நாளில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையைப் படைத்தது. இப்படி இருக்கும்போது படம் இரண்டாவது நாளிலும் மூன்றாவது நாளிலும் உலகம் முழுவதும் சேர்ந்து கிட்டத்தட்ட ரூபாய் 160 கோடிகள் முதல் 170 கோடிகள் வரை வசூலித்ததாக கூறப்படுகிறது. ஆனால் படம் மூன்றாவது நாளில் இந்தியாவில் மட்டும் ரூபாய் 38.5 கோடிகள் வசூல் செய்துள்ளதாக சாக்நிக் வலைதளம் தெரிவித்துள்ளது. ஆனால் படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் எவ்வளவு என்பதை படக்குழு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வில்லை. ஆனால் படம் முதல் மூன்று நாட்களில் உலக அளவில் ரூபாய் 300 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருக்கும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











