Coolie Box Office: எப்பவுமே பாக்ஸ் ஆபிஸில் தலைவர் தான் முரட்டுக் காளை.. கூலி 4 நாள் வசூல் வேட்டை!

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 14ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் கூலி. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படம் கடந்த இரண்டு ஆண்டுகளாக எடுக்கப்பட்டது. மிகுந்த எதிர்பார்ப்பு மத்தியில் ரிலீஸ் ஆன படத்திற்கு விமர்சன ரீதியாக கலவையான கருத்துகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. ஆனாலும் படம் வசூலில் கெத்து காட்டி வருகிறது. படம் வெளியாகி முதல் நான்கு நாட்களில் எவ்வளவு வசூல் குவித்தது என்பது குறித்து இந்த தொகுப்பில் காணலாம்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைவாழ்க்கையில் 50 ஆண்டுகளை நிறைவு செய்யும், காலகட்டத்தில் கூலி படம் வெளியானது. இவர் கடந்த 1975 ஆம் ஆண்டு அபூர்வ ராகங்கள் என்ற படத்தில் அறிமுகமானார். இந்த படம் 1975ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸ் ஆனது. கடந்த 50 ஆண்டுகளில் 171 படங்களில் நடித்துள்ளார் ரஜினிகாந்த். இந்த படத்தில் ரஜினியுடன் மலையாள திரையுலகில் இருந்து சௌபின் சாஹிர், கன்னட திரையுலகில் இருந்து உபேந்திரா, தெலுங்கு திரையுலகில் இருந்து நாகார்ஜுனா, பாலிவுட் திரையுலகில் இருந்து ஆமிர் கான் என பான் இந்தியா அளவுக்கு நட்சத்திரங்கள் நடித்திருந்தார்கள்.

Rajinikanth Coolie Movie Hits Day 4 Box Office Collection More Than 400 cr World Wide
Photo Credit:

இவர்கள் மட்டும் இல்லாமல், தமிழ் திரையுலகில் இருந்து சத்யராஜ், ஸ்ருதி ஹாசன், காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தார்கள். படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு என்பது படக்குழுவே எதிர்பார்க்காதது. குறிப்பாக மோனிகா பாடல் படத்தை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்தது. படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல வெற்றிப் படமாகவே மாறியுள்ளது.

1000 கோடிகள் எதிர்பார்ப்பு: படம் முதல் நாளில் ரூபாய் 151 கோடிகளை வசூல் செய்தது. இது, தமிழ் திரையுலகில் ஒரு படம் முதல் நாளில் அதிக வசூல் குவித்த படமாக வரலாறு படைத்துள்ளது. படம் பான் இந்தியா அளவில் ஹிட் அடிக்கும், ரூபாய் 1000 கோடிகளை வசூல் செய்யும் என்று எல்லாம் பலரும் நினைத்துக் கொண்டு இருந்தார்கள். ஆனால் கலவையான விமர்சனங்களுக்குப் பின்னர் 1000 கோடிகள் வசூல் என்பது சாத்தியப்படுமா என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது.

Rajinikanth Coolie Movie Hits Day 4 Box Office Collection More Than 400 cr World Wide
Photo Credit:

வசூலில் வரலாறு: படம் முதல் நாளில் ரூபாய் 151 கோடிகள் வசூல் செய்தது என படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. நேற்றுடன் அதவது ஆகஸ்ட் 17ஆம் தேதியுடன் படம் வெளியாகி நான்கு நாட்கள் ஆகிறது. இந்த நான்கு நாட்களில் படத்தின் வசூல் கிட்டத்தட்ட 400 கோடிகளை உலக அளவில் வசூல் செய்துவிட்டது என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவிலேயே சுமார் ரூபாய் 200 கோடிகள் முதல் ரூபாய் 220 கோடிகள் வரை வசூல் செய்து விட்டதாக கூறப்படுகிறது.

மொத்த வசூல்: சாக்நிக் வலைதளம் தெரிவித்துள்ள தோராயக் கணக்குப் படி இந்தியாவில் படம் ரூபாய் 194.5 கோடிகள் வசூல் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. அதிகாரப்பூர்வ வசூல் கணக்கை படக்குழு இதுவரை அறிவிக்கவில்லை. எப்படியும் படம் முதல் நான்கு நாட்களில் ரூபாய் 400 கோடிகளில் இருந்து ரூபாய் 410 கோடிகள் வரை வசூல் செய்திருக்கும் என ரசிகர்கள் வட்டாரத்தில் பேச்சுகள் அடிபடுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X