»   »  அடுத்து ஆஸ்கர் ரவிச்சந்திரனைக் காப்பாற்றுகிறார் ரஜினி!

அடுத்து ஆஸ்கர் ரவிச்சந்திரனைக் காப்பாற்றுகிறார் ரஜினி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவில் இப்போதைய பரபரப்பு ரஜினி எடுத்துள்ள அதிரடி முடிவுகள்தான். அடுத்தடுத்து மூன்று படங்களில் அவர் நடிக்கப் போகிறாராம்.

இந்த மூன்றும் தமிழ் சினிமாவில் ஜாம்பவான்களாக இருந்து, இப்போது கஷ்டப்படும் தயாரிப்பாளர்களைக் கைத்தூக்கிவிடத்தான்.

தாணுவுக்கு முதலில்

தாணுவுக்கு முதலில்

முதல் படம் தனது நீண்ட நாள் நண்பரும், ரஜினியை வைத்து ஒரு படமாவது எடுக்க மாட்டோமா என்ற ஏக்கத்திலிருந்தவருமான கலைப்புலி தாணுவுக்காக. இதை ரஞ்சித் இயக்குகிறார் என்பதெல்லாம் பழைய செய்தி.

ஷங்கர் படம் எப்போ?

ஷங்கர் படம் எப்போ?

அடுத்த படம் ஷங்கர் இயக்கப் போவது. இது நீண்ட நாள் புராஜெக்ட். முன் தயாரிப்புப் பணிகளுக்கே 6 மாதங்களாகும் என்பதால், இதை வரும் ஜனவரியில் ஆரம்பிக்கத் திட்டமாம்.

ஆஸ்கர் ரவிச்சந்திரன்

ஆஸ்கர் ரவிச்சந்திரன்

மூன்றாவது படம், ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்காம்.

இவரும் ரஜினியிடம் நீண்ட நாட்களாக கால்ஷீட் கேட்டு வருகிறார். ஆனால் ரஜினி கண்டுகொள்ளாமல்தான் இருந்தார். ஆனால் ஐ படத்தின் போது, ரவிச்சந்திரனுக்கு பெரிய உதவி செய்தார் ரஜினி. அவர் படம் தெலுங்கில் சிக்கலின்றி வெளியாகக் காரணமே ரஜினிதானாம். இதற்காக அவர் ரஜினியை வீட்டில் போய் சந்தித்துவிட்டு நன்றி கூறிவிட்டு வந்தார்.

கை கொடுக்கும் கை

கை கொடுக்கும் கை

இந்த நிலையில் இப்போது அவரது சொத்துகள் அனைத்தும் ஜப்திக்கு வந்துவிட்டன. பெரும் நெருக்கடியில் உள்ள அவருக்குக் கை கொடுக்க ஒரு படம் நடித்துத் தரப் போகிறார் ரஜினி.

சுந்தர் சி

சுந்தர் சி

அந்தப் படத்தை இயக்கப் போகிறவர் சுந்தர் சி என்கிறார்கள். முழுக்க முழுக்க நகைச்சுவை - ஆக்ஷன் கதையாக இந்தப் படம் இருக்குமாம். கதை கேட்டு ஓகேவும் சொல்லிவிட்டாராம் ரஜினி.

ரஞ்சித் படத்தை பொங்கலுக்கும், சுந்தர் சி படத்தை தீபாவளிக்கும் வெளியிடத் திட்டம் என்கிறார்கள்.

English summary
According to Kollywood sources, Rajinikanth has came forward to help produce Aascar Ravichandiran who is in biggest financial crunch. He is going to do a movie for Aascar Ravi with director Sundar C.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil