Vijay: விஜய்யை ஓபனாகவே அட்டாக் செய்த ரஜினிகாந்த்.. இவரோட எலெக்‌ஷன் கணக்கே வேற ரகமா இருக்கேப்பா?

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் திரையுலகில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறாரோ, அதே அளவுக்கு அவர் தமிழ்நாடு தேர்தல் களத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். அப்படி அவர் ஏற்படுத்திய தாக்கங்களால் ஆட்சி மாற்றங்கள் எல்லாம் ஏற்பட்டுள்ளது. இப்படி இருக்கையில் எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற பொதுத் தேர்தலில் அவரது தாக்கம் இருக்கும் என்பது நேற்று அதாவது செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெற்ற வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியில் அப்பட்டமாக தெரிந்துள்ளது.

அதாவது நேற்று இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இத்தனைக்கும் இளையராஜா பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். இப்படி இருக்கையில் கட்சி பேதமின்றி, அவருக்கு தமிழ்நாட்டில் ஆட்சிக் கட்டிலில் உள்ள திராவிட முன்னேற்றக் கழக அரசு பாராட்டு விழா நடத்தியது. இப்படி இருக்கையில் இந்த நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள்.

இந்த நிகழ்ச்சியில் பேசுகையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதலில் முதலைமைச்சருக்கு வணக்கம் தெரிவித்தார். அப்போது அவர் பேசுகையில், இந்திய அரசியலிலேயே ஒரு நட்சத்திரமாகவும், இந்திய நாட்டை ஆளுகின்ற கட்சிக்கும் புதிய பழைய எதிர்க்கட்சியினருக்கும் ஒரு சவாலாக இருந்து கொண்டு, வாங்க 2026இல் பாத்துக்கலாம் என, தனக்கே உரிய புன்னகையுடன் செயல்பட்டுக் கொண்டு உள்ள, தமிழ்நாடு முதலமைச்சர், எனது நண்பர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு வணக்கம்" என்று பேசத் தொடங்கினார்.

Rajinikanth Directly Attacks Vijay For Tamil Nadu Election 2026
Photo Credit:

நோக்கம் இதுவா?: அவரது இந்த பேச்சு என்பது ஏதோ அந்த மேடைக்கு அலங்காரம் சேர்க்கும் பேச்சாக அரசியல் தளத்தில் பார்க்கப்படவில்லை. மாறாக அவர் புதிய எதிர்க்கட்சிகள் என்று நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் குறித்துதான் குறிப்பிடுகிறார் என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது. இப்படி இருக்கையில் ஏற்கனவே விஜய் மற்றும் ரஜினி ரசிகர்களுக்கு இடையே சமூக வலைதளங்களில் கடந்த சில ஆண்டுகளாகவே வார்த்தைப் போர் என்பது மிகவும் மூர்க்கமாக இருந்து வருகிறது.

ரசிகர்களை கொம்பு சீவி விடும் ரஜினி: இப்படியான நிலையில் அவர் இசைஞானிக்கான பாராட்டு விழாவில் தனது ரசிகர்களுக்கு ஏற்கனவே உள்ள விஜய் எதிர்ப்பு மனநிலை என்பதை கொஞ்சம் கொம்பு சீவி விட்டுள்ளார் என்ற பேச்சு கிளம்பியுள்ளது. ஏற்கனவே அரசியல் கேள்விகளுக்கு செய்தியாளர்கள் சந்திப்பில் பதில் அளிப்பதை தவிர்த்து வரும் ரஜினிகாந்த், இந்த மேடையில் முதலமைச்சருக்கு வணக்கம் வைப்பது என்பதை வேறு வகையில் செய்திருக்கலாம். ஆனால் அவர் புதிய எதிரிகள் எனக் குறிப்பிடக் காரணமே விஜய்யை அட்டாக் செய்வதற்குத்தான் என்றும் பேசி வருகிறார்கள். இவரது இந்த பேச்சு தொடர்பான யூகங்கள் பலவும் தற்போது அரசியல் தளத்திலும் சினிமாத்துறையில் வேகமாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X