twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என்னை வாழவைக்கும் தமிழ் தெய்வங்களே… சாதி, மத பேதம் வேண்டாம்… புனித் விழாவில் ரஜினி நெகிழ்ச்சி

    |

    பெங்களூரு: கன்னட திரையுலக ரசிகர்களால் அப்பு என்றழைக்கப்பட்ட புனித் ராஜ்குமார் கடந்த ஆண்டு காலமானார்.

    புனித் ராஜ்குமார் மறைந்து ஒராண்டு நிறைவான நிலையில், கர்நாடக அரசு சார்பில் 'கர்நாடக ரத்னா விருது' வழங்கப்பட்டது.

    இந்த விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், ஜுனியர் என்.டி.ஆர் ஆகியோர் கலந்துகொண்டு புனித்தின் மனைவியிடம் கர்நாடக ரத்னா விருதை வழங்கினர்.

    புனீத் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது: ரஜினி, Jr NTR கைகளால் விருது பெற்றார் அப்புவின்மனைவி! புனீத் ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது: ரஜினி, Jr NTR கைகளால் விருது பெற்றார் அப்புவின்மனைவி!

    பெங்களூரு சென்ற ரஜினிகாந்த்

    பெங்களூரு சென்ற ரஜினிகாந்த்

    கன்னட சினிமாவின் முன்னணி நடிகரான புனித் ராஜ்குமார், கடந்தாண்டு அக்டோபர் மாதம் 29-ம் தேதி மாரடைப்பால் காலமானார். அப்பு என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட புனித் ராஜ்குமார் 46 வயதில் உயிரிழந்தது ஒட்டுமொத்த திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆதரவற்ற குழந்தைகளுக்கு கல்வி உட்பட ஏராளமன சமூக சேவைகளில் ஈடுபட்டு வந்த புனித் ராஜ்குமாருக்கு, கர்சாடக ரத்னா விருது வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவித்திருந்தார். இந்நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று சென்னையில் இருந்து பிரைவேட் ஜெட் மூலம் பெங்களூரு சென்றிருந்தார்.

    புனித் ராஜ்குமாருக்கு விருது

    புனித் ராஜ்குமாருக்கு விருது

    புனித் ராஜ்குமாருக்கு விருது வழங்கும் விழா, பெங்களூருவில் உள்ள விதான் சவுதாவில் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் அங்கு கூடியிருந்தனர். அப்போது, அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, நடிகர்கள் ரஜினிகாந்த், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர், புனித் ராஜ்குமாரின் மனைவி அஸ்வினியிடம் கர்நாடக ரத்னா விருதை வழங்கினார். அதனைத் தொடர்ந்து இந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த், "புனித் ராஜ்குமாருக்கு விருது வழங்கும் இந்த தருணத்தில் மழை பெய்து கொண்டிருக்கிறது. இதன் மூலம் அவர்களது குடும்பத்திற்கு இறைவன் அருள் இருக்கிறது. புனித் ராஜ்குமார் கடவுளின் குழந்தை" என்றார்.

    சாதி, மத பேதமின்றி

    சாதி, மத பேதமின்றி

    தொடர்ந்து பேசிய ரஜினி, "கர்நாடகத்தின் 7 கோடி மக்களுக்கும் கர்நாடக ராஜ்யோத்சவா வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். சாதி, மத, பேதம் இல்லாமல் மக்களுக்கு நிம்மதி, மகிழ்ச்சியை வழங்க வேண்டும் என்று தாய் புவனேஸ்வரி, அல்லா, இயேசுவிடம் வேண்டி கேட்டுக்கொள்கிறேன். கடவுளின் குழந்தையான புனித் ராஜ்குமார், சிறிது காலம் நம்முடன் இருந்து விளையாடிவிட்டு மீண்டும் கடவுளிடமே சென்று விட்டார். தற்போது மழை பெய்வதால் அதிகம் பேச முடியவில்லை. அவரது தந்தை ராஜ்குமாருக்கு கர்நாடக ரத்னா விருது வழங்கியபோதும் இதேபோல் மழை பெய்தது" என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

    புனித் ராஜ்குமாருக்கு மரணம்

    புனித் ராஜ்குமாருக்கு மரணம்

    மேலும், "புனித் ராஜ்குமாரை முதன்முதலில் 1979ம் ஆண்டு சென்னையில் பார்த்தேன். நடிகர் நம்பியாருடன் சுமார் 800 பேர் சபரிமலைக்கு செல்வார்கள். அவர்களில் நடிகர் ராஜ்குமாரும் ஒருவர். அதன் பிறகு புனித் ராஜ்குமார் நடித்த அப்பு படத்தின் வெற்றிவிழாவில் விருது கொடுப்பதற்காக வந்திருந்தபோது பார்த்தேன். புனித் மரணம் அடைந்தபோது நான் ஆஸ்பத்திரியில் இருந்ததால் என்னிடம் யாரும் எதுவும் சொல்லவில்லை. 3 நாட்களுக்கு பிறகே எனக்கு தெரியவந்தபோது மிகவும் வேதனையடைந்தேன்" எனக் கூறினார்.

    அப்புவிற்கு பாராட்டு

    அப்புவிற்கு பாராட்டு

    தொடர்ந்து பேசிய அவர், "புனித் மனிதநேய மிக்கவராக இருந்துள்ளார், ஏழை மக்களுக்கு உதவி செய்துள்ளார். அதனால் அவர் மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளார். அவரது ஆத்மா பெரியது. தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர். நடிப்புடன் மக்களுக்கு ஏராளமான உதவிகளை செய்தார். சினிமாவில் நல்ல கதைகளை கொண்ட படங்களில் நடித்ததுடன் அதே போல் உதவிகளையும் செய்தார். அதனால் அவர் மக்களின் மனதில் இடம் பிடித்தார். ஆந்திராவில் என்.டி.ராமாராவும் மக்களின் அன்பை பெற்றார். கர்நாடகத்தில் ராஜ்குமாரும் தனது நடிப்பு மற்றும் மனிதநேயத்தால் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அதே வரிசையில் புனித் ராஜ்குமாரும் சேர்ந்துள்ளார்" என அவருக்கு பாராட்டு தெரிவித்தார்.

    வாழ வைத்த தமிழ் மக்களே

    வாழ வைத்த தமிழ் மக்களே

    இந்த நிகழ்ச்சி முழுவதும் கன்னடத்தில் பேசிய ரஜினி, "இந்த விழாவிற்கு ஏராளமான தமிழர்களும் வந்துள்ளனர். என்னை வாழவைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கும் என் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்பதை மட்டும் தமிழில் பேசி முடித்தார். தொடர்ந்து மழை பெய்துகொண்டே இருந்ததால் இரண்டரை மணி நேரத்துக்கு திட்டமிடப்பட்டிருந்த இந்த விழா 30 நிமிடங்களில் விரைவாக முடிக்கப்பட்டது. ஆனாலும், ரசிகர்கள் இறுதிவரை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விடை பெற்றனர்.

    English summary
    Late actor Puneeth Rajkumar was awarded Karnataka Ratna. Presented by the Karnataka state government, actor Rajinikanth presented this award to Puneeth Rajkumar's wife. Then he spoke very warmly about the late actor Puneeth Rajkumar.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X