Don't Miss!
- News
அடேங்கப்பா.. "ட்விஸ்ட்டு".. எடப்பாடி பல்டி.. அண்ணாமலைக்கு போன் போட்ட சீனியர்கள்.. காத்து திரும்புதே!
- Automobiles
மாருதி, ஹூண்டாயை அண்ணாந்து பாக்க வைத்த டாடா! சம்பவம் லோடிங்! தளபதி 67-ஐ விட எதிர்பார்ப்பு எகிறிகிட்டே போகுது!
- Sports
டி20 வரலாற்றில் இந்தியாவின் மகத்தான வெற்றி.. 3வது டி20ல் சுப்மன் கில் தந்த ஷாக்.. ஆடிப்போன நியூசி!
- Finance
மூலதன செலவு ரூ.10 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிதியமைச்சர் கொடுத்த சூப்பர் அப்டேட்!
- Lifestyle
எடையை வேகமாக குறைக்க ஆசைப்படுறீங்களா? அப்ப இந்த உணவுகளை தெரியாமகூட சேர்த்து சாப்பிடாதீங்க!
- Technology
அந்த ஹார்திக் பாண்டியா போன் நியாபகம் இருக்கா? அறிமுக தேதி உறுதி! விலை இதுதானா?
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
45 வருடங்களாக என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி… ரஜினிகாந்த் உருக்கமான ட்விட்டர் பதிவு !
சென்னை: ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படத்தின் முதல் பாடல் இணையத்தில் சற்றுமுன்பு வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து வைரலாகி வருகிறது.
எஸ்.பி.பி ரஜினிக்காக கடைசியாக பாடியுள்ள இந்த பாடல் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
வலிமை
கதாநாயகி
வெளியிட்ட
லேட்டஸ்ட்
போட்டோ
ஷூட்
புகைப்படங்கள்
வைரல்!
இதில் இதுதான் அவர் எனக்குப் பாடும் கடைசிப் பாடலாக இருக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை என்று உருக்கமாக கூறியுள்ளார்.

அண்ணாத்த
தர்பார் படத்திற்கு பிறகு நடிகர் ரஜினி சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார். நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, பிரகாஷ் ராஜ், சூரி, சதீஷ் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

தீபாவளிக்கு ரிலீஸ்
தீபாவளியை முன்னிட்டு வரும் நவம்பர் 4ஆம் தேதி படம் வெளியாகிறது. சென்னையில் படமாக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு, பின் ஹைதராபாத், மேற்குவங்கம் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றதைத் தொடர்ந்து இறுதிக்கட்டப் படப்பிடிப்பு, ஆகஸ்ட் 27-ஆம் தேதி நிறைவடைந்தன.

அண்ணாத்த வர்றேன்
சூப்பர் ரஜினிகாந்துக்காக அண்ணாத்த படத்தல் எஸ்.பி.பி பாடிய கடைசி பாடலான அண்ணாத்த, அண்ணாத்த வர்றேன் அதிரடி சரவெடி தெருவெங்கும் வீசு, அண்ணாத்த, அண்ணாத்த வர்றேன் நடையில, உடையில கொல, கொல மாஸு என்பதாக அந்த பாடல் உள்ளது.

ரஜினிகாந்த் ட்விட்டர்
இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில், 45 வருடங்கள் என் குரலாக வாழ்ந்த எஸ்பிபி அவர்கள் அண்ணாத்தே படத்தில் எனக்காகப் பாடிய பாடலின் படப்பிடிப்பின் போது, இதுதான் அவர் எனக்குப் பாடும் கடைசிப் பாடலாக இருக்கும் என்று நான் கனவில் கூட நினைக்கவில்லை. என் அன்பு எஸ்பிபி தன் இனிய குரலின் வழியாக என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார் என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

எஸ்.பி.பி, ரஜினி
ரஜினி திரைப்படத்தில் ரஜினியின் அறிமுகப் பாடலை பாடியவர்களின் பட்டியலில் முதலிடம் பிடிப்பது எஸ்.பி.பியே. ரஜினி படங்கள் என்றாலே கட்டாயம் அதில் எஸ்.பி.பி பாடல் இருக்கும். அப்படி வெளியான பாடல்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன.

மை நேம் இஸ் பில்லா
ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்த பில்லா திரைப்படத்தில் மை நேம் இஸ் பில்லா என்ற பாடலை பாடி பட்டி தொட்டி எங்கும் ஒளிக்க செய்தார். அதே போல நான் பொல்லாதவன் பாடலும் ரஜினி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். எஸ்.பிபி மற்றும் ஸ்வர்ணலதா ஆகியோரது குரலில் இளையராஜா இசையில் உருவாக்கப்பட்ட இந்த பாடல் மிகப் பிரபலமான பாடல் என்ற பெருமையை பெற்றது.

நான் தான்டா இனிமேலு
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்தின் பேட்ட படத்தில் எஸ்.பி.பி யின் மரண மாஸ் பாடல் ஒலித்தது. அதனைத் தொடர்ந்து கடைசியாக வெளியான தர்பார் திரைப்படத்திலும் நான் தான்டா இனிமேலு என்ற சூப்பர் ஹிட் பாடலையும் பாடினார்.