twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொல காண்டுல இருக்கேன்.. ஆக்ரோஷமாக ரஜினி போட்ட டிவிட்.. கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்! #Rajinikanth

    |

    சென்னை: சாத்தான்குளம் விவகாரம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்தின் கருத்தை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

    சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்தனர் தந்தை மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ். இவர்கள் கூடுதல் நேரம் கடையை திறந்து வைத்திருந்ததற்காக போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

    பின்னர் விசாரணை கைதியாக கோவில்பட்டி சிறைக்கு மாற்றப்பட்ட போது அவர்கள் இருவரும் அடுத்தடுத்து இறந்துவிட்டனர். இந்த சம்பவம் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுக்கவும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

    குட்டியான டவுசரில் தொடை தெரியும் படி.. குத்தாட்டம் போட்ட நடிகை!குட்டியான டவுசரில் தொடை தெரியும் படி.. குத்தாட்டம் போட்ட நடிகை!

    கிடைக்க வேண்டும்

    கிடைக்க வேண்டும்

    இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், தந்தையையும் மகனையும் சித்ரவதை செய்து மிருகத்தனமாகக் கொன்றதை மனித இனமே எதிர்த்து கண்டித்த பிறகும், காவல் நிலையத்தில் மாஜிஸ்திரேட் எதிரிலேயே சில காவலர்கள் நடந்து கொண்ட முறையும் பேசிய பேச்சும் அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தகுந்த தண்டனை கண்டிப்பாக கிடைத்தே ஆக வேண்டும். விடக் கூடாது. என்று பதிவிட்டிருந்தார்.

    ஹேஷ்டேக்குகள் ட்ரென்ட்

    ஹேஷ்டேக்குகள் ட்ரென்ட்

    மேலும் சத்தியமா விடவே கூடாது என்ற ஹேஷ்டேக்கையும் குறிப்பிட்ட ரஜினி கோபம் தகிக்கும் கண்களுடன் போட்டோவையும் பதிவிட்டிருந்தார். ரஜினியின் கருத்தையும் அவரது போட்டோவையும் பார்த்த ரசிகர்கள் #சத்தியமா_விடவே_கூடாது, #Rajinikanth ஆகிய ஹேஷ்டேக்குகளை ட்ரென்ட் செய்து அவரை கொண்டாடி வருகின்றனர்.

    கோபமாக பார்த்து

    கோபமாக பார்த்து

    ரஜினியின் இந்த பதிவை பார்த்த இந்த நெட்டிசன், சாந்தமான தலைவரை கோபமாக பார்த்து ரொம்ப நாளாச்சு. இந்த மனித மிருகங்கள் அவரையே கோபப் படுத்தியிருக்கின்றன.. என கூறியிருக்கிறார்.

    லவ் யூ தலைவா..

    லவ் யூ தலைவா..

    மற்றொரு ரசிகரான இவர், சத்தியத்தின் குரல் ஒலித்துவிட்டது இங்கே வேகமாய்.. ஆணித்தரமாய்... மறுக்க முடியாத வார்த்தைகளாய்.... லவ் யூ தலைவா.. என தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.

    பார்த்து உஷாரு

    பார்த்து உஷாரு

    மற்றொரு ரசிகரான இவரு கண்ணுல திமிரு, உன்ன ராட் எடுக்க வந்தாரு தலைவன் வேற ரகம், பார்த்து உஷாரு என ரஜினியை புகழ்ந்து தில்லாய் நெஞ்சை நிமிர்த்து பதிவிட்டுள்ளார்.

    கண்ணில் இல்லை உறக்கம்

    கண்ணில் இல்லை உறக்கம்

    இந்த ரசிகர் ரஜினி பாடலான,
    சிங்கம் ஒன்று புறப்பட்டதே அதுக்கு நல்ல
    காலம் பொறந்திருக்கு நேரம் கனிஞ்சிருக்கு
    ஊரும் தெரிஞ்சிருக்கு உண்மை புரிஞ்சிருக்கு
    உன்னோடு ரத்தம் சிந்த உண்மையுள்ள கூட்டம் உண்டு
    ரெண்டில் ஒன்று பார்க்கும் வரைக்கும்
    அட ரெண்டு கண்ணில் இல்லை உறக்கம் சபதம் செய்து
    தலைவா என பதிவிட்டுள்ளார்.

    வரிசைல வா...

    வரிசைல வா...

    மற்றொரு ரசிகரான இவர், சாத்தான்குளம் விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் கருத்து கூறவில்லை என்று கூறியவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் கேள்வி கேட்டவன்லாம் வரிசைல வா... என விளாசியிருக்கிறார்.

    ரஜினிடா..

    ரஜினிடா..

    எடுத்ததுக்கு எல்லாம் சத்தம் போட்டு பிரிவினை உண்டாக்கி அரசியல் லாபம் தேடும் சுயநல அரசியல்வாதின்னு நினைச்சியாடா?? விஷயம் என்னன்னு ஆராய்ந்து அடிக்கும் ரஜினி டா !!! என கூறியிருக்கிறார் இந்த ரசிகர்.

    கொல காண்டுல இருக்கேன்

    கொல காண்டுல இருக்கேன்

    பேட்ட படத்தில் இடம் பெற்ற டயலாக்கான கொல காண்டுல இருக்கேன்.. என்ற டயலாக்கை குறிப்பிட்டுள்ள இந்த நெட்டிசன், #சத்தியமா_விடவே_கூடாது இவங்கள என ரஜினியின் கருத்துக்கு ஆதரவு கூறியுள்ளார்.

    ஒத்த பார்வைக்கு..

    ஒத்த பார்வைக்கு..

    மற்றொரு நெட்டிசனான இவர் 1000 வார்த்தைகள் பேசியிருந்தாலும், பதிவிடிருந்தாலும் இந்த ஒத்த பார்வைக்கு ஈடாகாது... இதை விட ஒரு கடுமையான கண்டனமும், காவலர்கள் மேல எடுக்க வேண்டிய நடவடிக்கை கோரிக்யைும் வேற எதுவும் இருக்க முடியாது...என கூறியிருக்கிறார்.

    தூக்குதான் தீர்ப்பு

    தூக்குதான் தீர்ப்பு

    ரஜினியின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ள இவர் #சத்தியமா_விடவே_கூடாது கண்டிப்பா விடவே கூடாது. தப்பு செய்தவர்களை...தூக்கு தண்டனை தான் தீர்ப்பு என்று கூறியிருக்கிறார்.

    English summary
    Rajinikanth fans celebrating his tweet on SathanKulam issue. Rajini hashtags also trending on twitter.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X