தீபாவளி பரிசு.. ஜெயிலர் 2 மேக்கிங் வீடியோவை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்.. ப்பா.. சூப்பர் ஸ்டார் சம்பவம்!

சென்னை: நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ஜெயிலர் 2 படத்தின் மேக்கிங் வீடியோவை தீபாவளி பரிசாக சன் பிக்சர்ஸ் வெளியிட்டு அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு தமிழ் சினிமாவில் ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்க்கும் படங்களில் ஒன்றாக ஜெயிலர் 2 படம் அமைய காத்திருக்கிறது. இந்த ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த கூலி திரைப்படம் ஓவர் ஹைப்புடன் வெளியானது. ஆனால், சரவெடியாக வெடிக்காமல் புஸ்வானமாக மாறிவிட்டது.

Rajinikanth fans getting a superb Diwali gift from Jailer 2 makers
Photo Credit:

ஆனால், இயக்குநர் நெல்சன் ஜெயிலர் படத்தில் காட்டிய அதே ஹுகும் மேஜிக்கை மீண்டும் ஜெயிலர் 2வில் நிகழ்த்தி காட்டுவார் என ரஜினிகாந்த் ரசிகர்கள் மலைபோல நம்பி காத்திருக்கின்றனர்.

2026ல் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்கள்: அடுத்த ஆண்டு பொங்கலுக்கு விஜய்யின் ஜன நாயகன் மற்றும் சிவகார்த்திகேயனின் பராசக்தி படங்கள் ரொம்பவே எதிர்பார்க்கக் கூடிய படங்களாக வெளியாக காத்திருக்கின்றன. இந்த 2 படங்களை தொடர்ந்து சூர்யாவின் கருப்பு படமும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. அனைத்து படங்களையும் விட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 திரைப்படத்துக்குத் தான் ஓவர் எதிர்பார்ப்பு உள்ளது. 2025ம் ஆண்டு முன்னணி நடிகர்களின் படங்கள் சொதப்பியதை போல அடுத்த ஆண்டு சொதப்பாமல் இருந்தால் தான் தமிழ் சினிமா தப்பிக்கும் என்கின்றனர்.

தீபாவளி பரிசு: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காலையிலேயே வீட்டுக்கு வெளியே காத்திருந்த தனது ரசிகர்களை சந்தித்து தீபாவளி வாழ்த்துகளை இமய மலையில் இருந்து திரும்பி வந்த ரஜினிகாந்த் கூறியுள்ளார். ஜெயிலர் 2 படம் கண்டிப்பாக அடுத்த ஆண்டு சம்மர் கொண்டாட்டமாக வெளியாகி மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. தீபாவளி பரிசாக ரசிகர்களுக்கு ஜெயிலர் 2 ப்ரோமோ மேக்கிங் வீடியோவை சன் பிக்சர்ஸ் வெளியிட்டு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.

ரஜினிகாந்த் சம்பவம்: நெல்சன், அனிருத்தின் ரகளையில் ஆரம்பித்து, அவர்களுக்கு ரஜினிகாந்த் ஐடியா கொடுக்கும் காட்சிகள் என சூப்பர் ஸ்டார் தரிசனம் தீபாவளிக்கு ரசிகர்களுக்கு கிடைத்துள்ளது. ஜெயிலர் 2வில் மோகன்லால், சிவராஜ்குமார், பாலகிருஷ்ணா உள்ளிட்ட பலரும் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மெயின் வில்லனாக எஸ்.ஜே. சூர்யா தான் இந்த படத்தில் மிரட்ட போகிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X