வாரிசு படத்தை மட்டுமில்லை.. ட்ரெய்லரை கூட பார்க்காதீங்க.. ரஜினிகாந்த் ரசிகர்கள் போர்க்கொடி!
சென்னை: நடிகர் விஜய் சூப்பர் ஸ்டார் என வாரிசு இசை வெளியீட்டு விழாவில் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், ரஜினிகாந்த் ரசிகர்கள் கொந்தளித்து போயுள்ளனர். தங்கள் முழு ஆதரவையும் துணிவு படத்துக்கு மட்டுமே செலுத்த போவதாகவும் வாரிசு படத்தை புறக்கணிக்க போவதாகவும் சோஷியல் மீடியாவில் கருத்துக்களை பதிவிட்டு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
வம்சி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள வாரிசு படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாக உள்ளது.
இந்நிலையில், வாரிசு படத்தின் ட்ரெய்லரை கூட பார்த்து ரெக்கார்டு படைக்க வைக்க வேண்டாம் என ரஜினி ரசிகர்கள் ட்வீட் போட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வாரிசு ட்ரெய்லர்
நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை 5 மணிக்கு சன் டிவி யூடியூப் சேனலில் வெளியாகிறது. துணிவு ட்ரெய்லர் கடந்த டிசம்பர் 31ம் தேதி வெளியாகி பீஸ்ட் ட்ரெய்லர் சாதனையை சமன் செய்த நிலையில், வாரிசு ட்ரெய்லர் 30 மில்லியன் வியூஸ்க்கு அதிகமாக 24 மணி நேரத்தில் அதிக வியூஸ் அள்ளி புதிய ரெக்கார்டு படைக்குமா என்கிற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

ரஜினி ரசிகர்கள் எதிர்ப்பு
நடிகர் விஜய் தான் நம்பர் ஒன் என்றும் ரஜினிகாந்தின் சூப்பர்ஸ்டார் பட்டத்தை விட தளபதி பட்டம் தமிழ் சினிமாவில் பெரியது என்றும் விஜய் ரசிகர்கள் சொல்லி வரும் நிலையில், கடுப்பான ரஜினி ரசிகர்கள் இன்று வெளியாகும் வாரிசு ட்ரெய்லரை பார்க்க வேண்டாம் என்றும் பொங்கலுக்கு வாரிசு படத்தை பார்க்காமல் புறக்கணிக்க வேண்டும் என்றும் கிளம்பி உள்ளனர்.

பாய்காட் வாரிசு
பாலிவுட்டில் தான் பாய்காட் பதான், பாய்காட் பாலிவுட் ஹாஷ்டேக்குகள் டிரெண்டாகி வரும் நிலையில், அதே போன்றதொரு நிலைமை விஜய்யின் வாரிசு படத்துக்கே வந்து விடுமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. விஜய் ரசிகர்கள் மற்றும் அஜித் ரசிகர்கள் என ஒட்டுமொத்தமாக இரு பெரும் முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் ஒன்று திரண்டு வாரிசு ட்ரெய்லரை புறக்கணிப்பார்களா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

ட்ரோல் செய்யவாவது
துணிவு ட்ரெய்லரை அஜித் ரசிகர்களுக்கு சமமாக விஜய் ரசிகர்களும் பார்த்ததன் விளைவு தான் 30 மில்லியன் வியூஸ் என்றும் ட்ரோல் செய்யவாவதது வாரிசு ட்ரெய்லரை அஜித் மற்றும் ரஜினிகாந்த் ரசிகர்கள் பார்ப்பார்கள் என்றும் நெட்டிசன்கள் கமெண்ட்டுகளை போட்டு கலாய்த்து வருகின்றனர்.

எங்கே போய் முடியுமோ
வாரிசு இசை வெளியீட்டு விழாவில் சரத்குமார் பற்ற வைத்த சூப்பர்ஸ்டார் சர்ச்சைக்கு நடிகர் விஜய் முற்றுப்புள்ளி வைக்காதவரை இந்த சர்ச்சை ஓயாது என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. சமூக வலைதளங்களில் சூப்பர் ஸ்டார் சர்ச்சை காரணமாக விஜய், அஜித் மற்றும் ரஜினி ரசிகர்கள் இடையே பெரும் விவாதங்களும் சண்டைகளும் ஏற்பட்டு வருகின்றன.

பொங்கலுக்கு சம்பவம் கன்ஃபார்ம்
இந்த பிரச்சனை இப்படியே பெரிதாகிக் கொண்டே போகுமானால் பொங்கலுக்கு தியேட்டரில் தள்ளுமாலா படத்தின் காட்சி தான் அரங்கேறும் என்றும் நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். சண்டை இல்லாமல் ஒற்றுமையாக விஜய் அஜித் ரசிகர்கள் இந்த பொங்கலை கொண்டாட வேண்டும் என சமீபத்தில் பேனர்கள் வைக்கப்பட்ட நிலையில், தற்போது நிலைமை வேறுமாறி சென்று கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications











