»   »  இயக்குநரை திக்குமுக்காட வைத்த ரஜினிகாந்தின் உதவி! rajinikanth

இயக்குநரை திக்குமுக்காட வைத்த ரஜினிகாந்தின் உதவி! rajinikanth

Posted By:
Subscribe to Oneindia Tamil
இயக்குநரை திக்குமுக்காட வைத்த ரஜினிகாந்த்!- வீடியோ

ஆடம் தாசன்... கீர்த்திசுரேஷ் - பாபி சிம்ஹா பாம்புச் சட்டை என்ற படத்தை இயக்கியவர். பெரிய சினிமா பின்புலம் கிடையாது. இயக்குநர் பா ரஞ்சித்திடம் உதவியாளராகப் பணியாற்றி, பின்னர் இந்த பாம்புச் சட்டை வாய்ப்பைப் பெற்றவர்.

படமும் அனைவரது பாராட்டையும் பெறும் அளவுக்கு சிறப்பாகவே இருந்தது. இந்த நிலையில் அண்மையில் ரஜினியைச் சந்தித்து தனது திருமணம் குறித்து தகவல் கூறியுள்ளார் இயக்குநர் ஆடம்தாசன். அவரிடம் நாளை வந்து பாருங்கள் என்று கூறி அனுப்பிவிட்டாராம் ரஜினி. இது ஆடம்தானுக்கு பெரும் ஏமாற்றமாகிவிட்டதாம்.

Rajinikanth gives sweet shock to young director

அடுத்து நடந்ததை ஆடம்தாசனின் நண்பர் இயக்குநர் பிரபு ராஜசோழன் இப்படிக் கூறுகிறார்: "உதவி செய்வது என்பது பப்ளிசிட்டிக்காக அல்ல. தன் மனசார ரஜினி அவர்கள் மக்களுக்கு உதவி செய்து கொண்டே இருக்கிறார். ஆனால் வெளியில் சொல்வது இல்லை. என்னுடன் இன்னொரு இயக்குநர் வேலைப் பார்த்தார். அவர்தான் ஆடம்தாஸ். பாம்புச் சட்டை இயக்குநர். அவர் போய் ரஜினியிடம் திருமண அழைப்பிதழ் கொடுக்க அப்பாயின்ட்மென்ட் கேட்டார். அதுக்கு நாளைக்கு வாங்க-ன்னு சொல்லியிருக்காங்க. அவர் எனக்கு போன் பண்ணி, என்ன பிரபு தலைவர்கிட்ட பேசினேன்... அவர் நாளைக்கு வரச் சொல்லிட்டாரேன்னார். சரி விடுங்க... ஏதாவது வேலையா இருந்திருப்பார். நாளைக்குப் போங்கன்னு சொன்னேன்.

Rajinikanth gives sweet shock to young director

அடுத்த நாள் ஆடம்தாஸ் போன் பண்ணார்... குரலில் ஒரே பதட்டம். கரண்ட் ஷாக் அடிச்ச மாதிரி பேசினார். என்ன தாஸ்னு கேட்டேன். 'தலைவர பாத்தேன் பிரபு... டக்குனு கைல ஒரு கவரை கொடுத்திட்டார். பிரிச்சுப் பார்த்தா 3 லட்ச ரூபா இருந்திச்சு,'ன்னு தழுதழுத்தார். ஆடம்தாஸ் இருந்த நிலையில் அது மிகப் பெரிய உதவி. 'அவருக்கு மேரேஜ்... இந்த நேரத்துக்கு தேவைப்படும்னு' தெரிஞ்சி உதவி செஞ்சிருக்கார் ரஜினி சார்.

இதைக் கூட ஆடம்தாஸ் வெளில சொல்லல... நான்தான் சொல்றேன். இல்லன்னா யாருக்கும் தெரியப் போறதில்ல. இப்படி ரஜினி சார் வெளில தெரியாம நிறைய உதவிகள் செஞ்சிக்கிட்டிருக்கார். செஞ்ச உதவியை மேடை போட்டு பப்ளிசிட்டி பண்ற பழக்கம் அவருக்கு இல்ல...," என்றார்.

English summary
Rajinikanth has gave a sweet shock by helping Rs 3 lakh to young director Adam Dass when the later need this amount badly.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X