»   »  அவரிடம் என்ன இருக்கு, மண்டையில் ஒன்னும் இல்லை: ரஜினியை கட்ஜு இப்படி சொல்லிட்டாரே!

அவரிடம் என்ன இருக்கு, மண்டையில் ஒன்னும் இல்லை: ரஜினியை கட்ஜு இப்படி சொல்லிட்டாரே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அமிதாப் பச்சனை போன்றே ரஜினிகாந்தின் தலையிலும் ஒன்றும் இல்லை என்று உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார். கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ள ரஜினியை பற்றி கட்ஜு இப்படி தெரிவித்துள்ளது அவரது ரசிகர்கள் கோபம் அடைய வைத்துள்ளது.

அரசியலுக்கு வருவது குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த 15ம் தேதி ரசிகர்கள் மத்தியில் பேசினார். அதில் இருந்து ரஜினி அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்று அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் இது குறித்து உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

தென் இந்தியர்கள்

தென் இந்தியர்கள்

தென் இந்தியர்கள் மீது நான் உயர்ந்த மதிப்பு வைத்துள்ளேன். ஆனால் அவர்கள் சினிமா நட்சத்திரங்களை போற்றி வணங்கும் முட்டாள்தனத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

சிவாஜி கணேசன்

சிவாஜி கணேசன்

நான் (1967-68ம் ஆண்டு) அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது எனது தமிழ் நண்பர்களுடன் சிவாஜி கணேசன் நடித்த படம் பார்க்கச் சென்றிருந்தேன். முதல் காட்சியில் சிவாஜியின் கால்களை மட்டும் காட்டினார்கள். அதை பார்த்தே ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.

ரஜினி

ரஜினி

தற்போது பல தென்னிந்தியரக்ள் ரஜினி மீது பைத்தியமாக உள்ளனர். சிலர் அவர் அரசியலுக்கு வந்து தமிழக முதல்வர் ஆக வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் ரஜினியிடம் அப்படி என்ன தான் உள்ளது?

தீர்வு

தீர்வு

வறுமை, வேலையில்லா திண்டாட்டம், ஊட்டச்சத்து குறைபாடு, மருத்துவ வசதிகள் இன்மை, விவசாயிகள் பிரச்சனை உள்ளிட்ட எதற்காவது ரஜினியிடம் தீர்வு உள்ளதா? அவரிடம் தீர்வு இல்லை என்றே நினைக்கிறேன்.

தலை

தலை

அப்படி இருக்கும்போது அவர் ஏன் அரசியலுக்கு வர வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்? அமிதாப் பச்சனை போன்றே ரஜினிகாந்தின் தலையிலும் ஒன்றும் இல்லை என தெரிவித்துள்ளார்.

English summary
Former Supreme Court judge Markandey Katju posted on facebook saying that like Amitabh Bachchan, Rajinikanth has nothing in his head.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil