Don't Miss!
- News
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. எங்களை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை.. அண்ணாமலை பரபர பேட்டி
- Finance
அமெரிக்காவுக்குப் போட்டியாக இந்திய நிறுவனங்கள்.. ஊழியர்கள் தான் பாவம்..!
- Automobiles
ரொம்ப பழசு போல தெரிஞ்சாலும் உடனே புதுசுபோல மாத்திடலாம்... வெது வெதுவெனு தண்ணி, சோப்பு கரைசலே போதும்!
- Sports
நியூசியை ஓயிட்வாஷ் செய்த இந்தியா.. 3வது ஒருநாள் போட்டியில் அபாரம்.. ஐசிசி நம்பர் 1 அணியானது இந்தியா
- Lifestyle
உங்க சருமம் பளபளன்னு ஜொலிக்கவும் முடி நீளமா வளரவும் பப்பாளியை எப்படி யூஸ் பண்ணனும் தெரியுமா?
- Technology
Android போன்களுக்கு புது சோதனை.! 'இதை' செஞ்சுடாதீங்க.! மானம், பணம் எல்லாமே போய்விடும்.! எச்சரிக்கை.!
- Travel
கன்பார்ம் செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டின் பயண தேதியை மாற்ற வேண்டுமா – இப்படி செய்யுங்கள்!
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
Le Musk படத்தை ரசித்த ஸ்பெஷல் கெஸ்ட்: யாரென்று தெரிகிறதா என்ற கேப்ஷனுடன் ஏஆர் ரஹ்மான் ட்விஸ்ட்
சென்னை: இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் தற்போது இயக்குநராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.
99 சாங்ஸ் படத்தின் கதை எழுதி தயாரித்த ஏஆர் ரஹ்மான், லீ மஸ்க் என்ற விர்ச்சுவல் ரியாலிட்டி படத்தை இயக்கியுள்ளார்.
36 நிமிடங்கள் ஓடக்கூடிய குறும்படமாக உருவாகியுள்ள லீ மஸ்க் திரைப்படத்தை பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
“Le
Musk
திரைப்படம்
ஒரு
கனவுலகின்
அதிசயம்”:
ஏஆர்
ரஹ்மானை
பாராட்டிய
சர்வதேச
பிரபலம்!

இயக்குநரான இசைப்புயல்
ஆஸ்கர் நாயகன் ஏஆர் ரஹ்மான், இசையமைப்பாளர் என்பதையும் கடந்து தற்போது பல புதிய முயற்சிகளில் தடம் பதித்து வருகிறார். இந்தியில் 99 சாங்ஸ் என்ற படத்திற்கு கதை, எழுதி தயாரித்திருந்தார் ஏஆர் ரஹ்மான். இந்தப் படம் ரசிகர்களிடம் ஓரளவு வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து 'லீ மஸ்க்' என்ற குறும்படத்தையும் ஏஆர் ரஹ்மான் இயக்கியுள்ளார். முக்கியமாக இந்தப் படம் விர்ச்சுவல் ரியாலிட்டி டெக்னாலஜியில் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரஹ்மானின் மனைவி சொன்ன கதை
லீ மஸ்க் படத்தின் கதையை ஏஆர் ரஹ்மான் மனைவி சாய்ரா ஒன்லைனாக கூறியுள்ளார். அதன் பின்னர் லீ மஸ்க் கதையை குராச்சி ஃபீனிக்ஸ் எழுத, ஏஆர் ரஹ்மான் இந்தப் படத்தை இயக்கி இசையமைத்துள்ளார். 36 நிமிட குறும்படமாக உருவாகியுள்ள லீ மஸ்க் ரோம் நகரில் 14 வெவ்வேறு கேமராக்களில் சூப்பர் - ரெசல்யூஷன் தரமான வீடியோக்களை கொண்டு புதிய டெக்னாலஜியில் தயாராகியுள்ளது. பிரான்ஸில் நடைபெற்ற கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட லீ மஸ்க் பலரின் பாராட்டுகளையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இவர் யாரென்று தெரிகிறதா?
விர்ச்சுவல் டெக்னாலஜி முறையில் ஏஆர் ரஹ்மான் எடுத்துள்ள இந்த புதிய முயற்சியை பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், லீ மஸ்க் படத்தை ரஜினிகாந்துக்கும் போட்டுக் காட்டியுள்ள ஏஆர் ரஹ்மான், அப்போது எடுத்திருந்த புகைப்படங்களை டிவிட்டரில் ஷேர் செய்துள்ளார். அந்த புகைப்படங்களை இவர் யாரென்று தெரிகிறதா என்ற கேப்ஷனுடன் ஏஆர் ரஹ்மான் ஷேர் செய்ய, அது தற்போது ட்ரெண்டாகி உள்ளது. லீ மஸ்க் படத்தை பார்த்து ரசித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என ரசிகர்களும் சரியாக கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நெகிழ்ச்சி
அதேபோல், ஏஆர் ரஹ்மான், ரஜினிகாந்த் ஒன்றாக எடுத்துக்கொண்ட போட்டோவை தனது இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார் ஐஸ்வர்யா. இன்னொரு செல்ஃபியை ஏஆர் ரஹ்மான் கிளிக் செய்ய, அதில் அவர்கள் இருவருடன் ஐஸ்வர்யாவும் இணைந்துள்ளார். இந்தப் போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த், "இரண்டு அற்புதமான மனிதர்கள் சந்திப்பதற்கு நான் காரணமாக இருக்கும் போது ஆசிர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன்" என பதிவிட்டுள்ளார். இதுவும் லீ மஸ்க் படத்தை பார்த்த பின்னர் எடுத்த போட்டோ தான் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தப் புகைப்படங்களையும் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

விக்னேஷ் சிவன் ட்வீட்
முன்னதாக ஏஆர் ரஹ்மான் இயக்கியுள்ள லீ மஸ்க் படத்தை, இயக்குநர் விக்னேஷ் சிவனும் பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை அவரும் நயன்தாராவும் துபாயில் பார்த்து ரசித்ததாக டிவீட் செய்திருந்தார். ஜூலியட் மெர்டினியன் என்ற பெண் சிறுவயது முதல் அநாதையாக இருந்த நிலையில், 20 ஆண்டுகளுக்குப் பிறகு தனது விதியை மாற்றிய ஆண்களைக் கண்டுபிடிக்க முடிவு செய்கிறார். அதன்படி அந்த ஆண்கள் பயன்படுத்தும் வாசனை திரவியத்தை வைத்து அவர்களை எப்படி அடையாளம் காண்கிறாள் என்பது லீ மஸ்க் படத்தின் கதை. இதில், நோரா அரனிசாண்டர், கை பர்நெட் ஆகியோர் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர். தொடர்ந்து பிரபலங்கள் பார்த்து பாராட்டி வரும் லீ மஸ்க் திரைப்படம், விரைவில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.