இந்தியாவிலேயே இதுதான் அதிகம்.. உச்சத்துக்கு எகிறிய ரஜினிகாந்த் சம்பளம்.. பரபரக்கும் தகவல்!

சென்னை: தலைவர் 169 படத்தில் நடிப்பதற்காக தனது சம்பளத்தை அதிகரித்துள்ளார் ரஜினிகாந்த் என்கிற தகவல் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

கடந்த தீபாவளிக்கு சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த திரைப்படம் வெளியானது.

இந்நிலையில், மீண்டும் ரஜினிகாந்தின் படத்தை தயாரிக்க சன் பிக்சர்ஸ் முன் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அண்ணாத்த வசூல்

அண்ணாத்த வசூல்

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான அண்ணாத்த திரைப்படம் விமர்சன ரீதியாக ஹிட் அடிக்கவில்லை என்றாலும், வசூல் ரீதியாக அந்த படம் ஹிட் என சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், மீண்டும் நடிகர் ரஜினிகாந்தின் படத்தை தயாரிக்கவும் சன் பிக்சர்ஸ் முன் வந்துள்ளது.

தலைவர் 169

தலைவர் 169

பீஸ்ட் படத்தை இயக்கிய இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் தலைவர் 169 படம் உருவாகப் போகிறது என்கிற அட்டகாசமான அறிவிப்பும் சமீபத்தில் வெளியானது. மேலும், இந்த படத்தில் சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன் மற்றும் ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிக்கப் போவதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.

150 கோடி சம்பளமா

150 கோடி சம்பளமா

தனது துபாய் டூரை முடித்து விட்டு சீக்கிரமே இயக்குநர் நெல்சன் தலைவர் 169 படத்தை ஆரம்பிப்பார் என்றும், நடிகர் ரஜினிகாந்தும் தனது ஃபிட்னஸை தயார் செய்து விட்டு படத்தில் நடிப்பார் என்றும் தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது இதுவரை எந்தவொரு இந்திய நடிகரும் வாங்காத அளவுக்கு தலைவர் 169 படத்துக்கு 150 கோடி ரூபாய் சம்பளம் வாங்கப் போவதாக வெளியான தகவல்களால் கோடம்பாக்கம் மட்டுமல்ல ஒட்டுமொத்த திரையுலகமே ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளது.

சன் பிக்சர்ஸ்க்கு லாபம்

சன் பிக்சர்ஸ்க்கு லாபம்

ரஜினிகாந்த், சூர்யா, விஜய் என தொடர்ந்து முன்னணி நடிகர்கள் படங்களை ரிலீஸ் செய்து வசூல் ரீதியாக மிகப்பெரிய லாபத்தை சன் பிக்சர்ஸ் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், தனது காலாண்டு ரிப்போர்ட்டில் தனது நிறுவனத்திற்கு நல்ல லாபம் கிடைத்துள்ளதாகவும் சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்துக்கு 150 கோடி சம்பளம் கொடுக்க தயாராக இருப்பதாக கூறுகின்றனர்.

பட்ஜெட் எவ்வளவு

பட்ஜெட் எவ்வளவு

நடிகர் ரஜினிகாந்தின் சம்பளமே 150 கோடி என்றால், படத்தின் ஒட்டுமொத்த பட்ஜெட் எவ்வளவு இருக்கும் என்றும் இயக்குநர் நெல்சன் தாக்குப் பிடிப்பாரா என்றும் ஏகப்பட்ட கேள்விகள் கிளம்பி உள்ளன. 250 கோடி பட்ஜெட்டில் படம் உருவானால், அதன் வசூல் 300 கோடிக்கு மேல் தாண்ட வேண்டுமே என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

நம்பர் ஒன்

நம்பர் ஒன்

சமீபத்தில் நடிகர் விஜய் 120 கோடி வரை சம்பளம் வாங்கப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில், 110 கோடியில் இருந்து நடிகர் ரஜினிகாந்தின் சம்பளம் 150 கோடி வரை சென்றுள்ளதாகவும், விஜய், அஜித்தை எல்லாம் தாண்டி பல மடங்கு ரஜினியின் சம்பளம் அதிகரித்து அவர் மீண்டும் நம்பர் ஒன் இடத்தை பிடிக்க உள்ளார் என்றும் கூறப்படுகிறது. ஆனால், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் எதையும் சன் பிக்சர்ஸ் இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X