சூரியனுக்கு பக்கத்துல நிக்கிறேன்.. ’லவ் டுடே’ பிரதீப் ரங்கநாதனுக்கு பொன்னாடை போர்த்திய ரஜினிகாந்த்!

சென்னை: 'லவ் டுடே' படத்தை பார்த்து ரசித்த நடிகர் ரஜினிகாந்த், அந்த படத்தின் இயக்குநரும் நாயகனுமான பிரதீப் ரங்கநாதனுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்திய புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

நேற்று வெளியான சமந்தாவின் யசோதா படத்திற்கே பாக்ஸ் ஆபிஸில் இந்த வாரம் டஃப் கொடுத்து வருகிறது லவ் டுடே.

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மழை காரணமாக லீவு விடப்பட்ட நிலையில், ஒட்டுமொத்த இளைஞர்கள் கூட்டமும் லவ் டுடே படத்தை பார்த்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கோமாளி வெற்றி

கோமாளி வெற்றி

அப்பா லாக் எனும் குறும்படத்தை இயக்கி நடித்த பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே படத்தை இயக்கி நடிக்கவே முயற்சி செய்தார். ஆனால், ஹீரோவாக அவரை சில தயாரிப்பாளர்கள் ஏற்காத நிலையில், ஜெயம் ரவியை வைத்து கோமாளி படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றியை கொடுத்தார். இந்நிலையில், கோமாளி வெற்றிக்கு பிறகு ஹீரோ அவதாரத்தை எடுத்துள்ளார்.

25 கோடி வசூல்

25 கோடி வசூல்


குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட லவ் டுடே திரைப்படம் 2கே கிட்ஸ்களுக்கு ரொம்பவே பிடித்துப் போன நிலையில், பலரும் ஹீரோ பிரதீப் உடன் தங்களை கனெக்ட் செய்து வரும் விதத்தில் திரைக்கதை செல்போனை சுற்றி நகரும் நிலையில், லவ் டுடே திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. வெளியான ஒரே வாரத்தில் 25 கோடி வசூலை இந்த படம் கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தனுஷ் போலவே இருக்காரே

தனுஷ் போலவே இருக்காரே

திருடா திருடி படத்தில் தனுஷை ரசிகர்கள் எப்படி பார்த்து வரவேற்பு கொடுத்தார்களோ அதே போல பிரதீப் ரங்கநாதனுக்கு தற்போது ரசிகர்களின் வரவேற்பு அமோகமாக இருக்கிறது. உடல் தோற்றத்திலும், நடிப்பிலும் தனுஷை போலவே பிரதீப் ரங்கநாதன் இருக்கிறார் என பலரும் விமர்சித்து வருகின்றனர்.

பொன்னாடை போர்த்திய ரஜினி

பொன்னாடை போர்த்திய ரஜினி

லவ் டுடே படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் அந்த படத்தை பார்த்து வெகுவாக ரசித்துள்ளார். இந்நிலையில், பிரதீப் ரங்கநாதனை வீட்டுக்கே அழைத்து பொன்னாடை போர்த்தி அவரை ஆரத்தழுவி படம் சூப்பர்.. பின்னிட்டீங்க என அவரது ஸ்டைலில் பாராட்டியுள்ளார். அதன் புகைப்படங்களை தற்போது பிரதீப் வெளியிட்டு தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

சூரியனுக்கு பக்கத்துல நிக்கிறேன்

சூரியனுக்கு பக்கத்துல நிக்கிறேன்

இதுக்கு மேல என்ன கேட்கப் போறேன்.. சூரியனுக்கு பக்கத்துல நிக்கிறேன் ரொம்ப கதகதப்பா இருக்கு. டைட் ஹக் கொடுத்து, அவர் என்னை பார்த்த பார்வையும், சிரித்த சிரிப்பும் சொன்ன பாராட்டுக்களையும் என்றுமே மறக்க மாட்டேன், நன்றி ரஜினி சார்.. நன்றி அர்ச்சனா கல்பாத்தி மேடம் என ட்வீட் போட்டுள்ளார் பிரதீப் ரங்கநாதன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X