»   »  லைகா நிறுவனத்தின் புதிய மருத்துவமனையைத் திறந்து வைத்தார் ரஜினிகாந்த்!

லைகா நிறுவனத்தின் புதிய மருத்துவமனையைத் திறந்து வைத்தார் ரஜினிகாந்த்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் கட்டப்பட்டுள்ள லைகா நிறுவனத்தின் புதிய மருத்துவமனையை நடிகர் ரஜினிகாந்த் தொடங்கி வைத்தார்.

ஜெமினி மேம்பாலம் அருகே அமைந்துள்ள இந்த மருத்துவமனை ரூ 125 கோடியில் லைகா நிறுவனர் சுபாஷ்கரனால் உருவாக்கப்பட்டுள்ளது. வெஸ்ட்மின்ஸ்டர் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த மருத்துவமனையை ரஜினிகாந்த், தன் மனைவியோடு வந்து தொடங்கி வைத்தார்.

Rajinikanth inaugurates Lyca's new hospital in Chennai

லைகா அதிபர் சுபாஷ்கரனை வாழ்த்திய பின்னர் ரஜினி பேசுகையில், "சுபாஷ்கரனை இரு ஆண்டுகளாகத்தான் தெரியும். ஆனால் ஒரு நாற்பது ஆண்டுகள் பழகிய மாதிரி எனக்கு வெகு நெருக்கமாகிவிட்டார். மிக அருமையான மனிதர், மனிதாபிமானி. அவர் இந்த மருத்துவமனையை சேவை நோக்கத்தில் திறந்திருக்கிறார். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்," என்றார்.

அவருடன் இயக்குநர் ஷங்கர் விழாவில் கலந்து கொண்டு வாழ்த்தினார்.

English summary
Actor Rajinikanth has inaugurated Lyca's Westminster Hospital on Wednesday in Chennai.
Please Wait while comments are loading...