»   »  கமலுக்கு இரண்டாவது முறையாக ஆபரேஷன்... போனில் நலம் விசாரித்த ரஜினி!

கமலுக்கு இரண்டாவது முறையாக ஆபரேஷன்... போனில் நலம் விசாரித்த ரஜினி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மாடிப் படியிலிருந்து விழுந்து கால் முறிந்து ஆபரேஷனுக்குப் பிறகு ஓய்வெடுத்து வந்த கமல் ஹாஸனுக்கு இன்று மீண்டும் அறுவைச் சிகிச்சை நடந்தது.

இதனைக் கேள்விப்பட்ட ரஜினிகாந்த், போனில் கமலை நலம் விசாரித்துள்ளார்.

கடந்த ஜூலை 13-ம் தேதி எல்டாம்ஸ் சாலையில் உள்ள தனது அலுவலக மாடியிலிருந்து விழுந்ததில் கமலுக்கு கால் முறிவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரது மூட்டில் முறிவு ஏற்பட்டதால், ப்ளேட் வைத்து அறுவைச் சிகிச்சை செய்தனர்.

Rajinikanth inquires Kamal Hassan's health

அதைத் தொடர்ந்து மருத்துவமனையிலேயே ஓய்வெடுத்து வந்த கமலுக்கு நேற்று மீண்டும் கடும் வலி ஏற்பட்டது. பரிசோதனை செய்து பார்த்ததில், அறுவைச் சிகிச்சை செய்த இடத்தில் மண் துகள்கள் இருந்தது தெரிய வந்தது. இதனால் மீண்டும் அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

கடும் வலியால் கமல் ஹாஸன் வேதனைப்படுவதை அறிந்து, ரஜினிகாந்த் நேரில் சென்று பார்க்க விரும்பினார். ஆனால் மருத்துவமனைக்குப் போனால் அவருக்கு நோய்த் தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதால், மனைவி லதா மற்றும் மருத்துவர்கள் போக வேண்டாம் எனத் தடுத்துவிட்டனர். எனவே கமலை போனில் அழைத்து நலம் விசாரித்தார் ரஜினி.

English summary
Kamal Hassan was undergone an operation for the second time for his injured knee.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil