ரஜினி, கமலுக்குப் பதிலாக சிம்பு ஃபஹத் பாசில்: ரீ-கிரியேட் ஆகும் அவள் அப்படித்தான்!

சென்னை: தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினி, கமல் இருவரும் இருபதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளனர்.

ரஜினி, கமல் நடிப்பில் 1978ல் வெளியான அவள் அப்படித்தான் திரைப்படம், ரி கிரியேட் செய்யப்படவுள்ளது.

இந்தப் படத்தில் ரஜினி, கமல் கேரக்டர்களில் சிம்பு, ஃபஹத் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார்களின் அவள் அப்படித்தான்

சூப்பர் ஸ்டார்களின் அவள் அப்படித்தான்

தமிழ்த் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களாக ரசிகர்களால் கொண்டாடப்படும் ரஜினியும் கமலும், 20க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் ஒன்றாக நடித்துள்ளனர். காதல், ஆக்சன், ஃபேமிலி சென்டிமெண்ட், ஃப்ரெண்ட்ஷிப் என எல்லாவிதமான ஜானர்களிலும் இவர்கள் இணைந்து நடித்த படங்கள் வெளியாகியுள்ளன. அவைகளில் மிக முக்கியமான திரைப்படம் 'அவள் அப்படித்தான்.' ருத்ரையா இயக்கத்தில் 1978ல் வெளியான இந்தப் படம், விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது. ரஜினி, கமலுடன் ஸ்ரீபிரியாவும் லீடிங் ரோலில் நடித்திருந்தார்.

இன்றும் அவள் அப்படித்தான்

இன்றும் அவள் அப்படித்தான்

ஆணாதிக்கம் காரணமாக பல இன்னல்களை சந்தித்து அதிலிருந்து வெளியேற துடிக்கும் இளம்பெண்ணின் கதையாக அவள் அப்படித்தான் உருவாகி இருந்தது. அந்த இளம்பெண்ணான மஞ்சு என்ற கேரக்டரில் ஸ்ரீப்ரியா நடித்திருந்தார், ரஜினி ஆணாதிக்க சிந்தனை கொண்ட தியாகு கேரக்டரிலும், முற்போக்கு சிந்தனை கொண்ட இளைஞனான அருண் பாத்திரத்தில் கமல்ஹாசனும் நடித்திருந்தனர். இந்தப் படத்தை அப்படியே ரீமேக் செய்யாமல், ரீ கிரியேட் செய்யவுள்ளதாக இயக்குநர் பத்ரி வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். இன்றும் அவள் அப்படித்தான் என்ற கேப்ஷனுடன் அவர் இது குறித்து ட்வீட் செய்துள்ளார்.

சிம்பு, ஃபஹத் பாசில் காம்போ

சிம்பு, ஃபஹத் பாசில் காம்போ

பானா காத்தாடி, செம்ம போதை ஆகாத, ப்ளான் பண்ணி பண்ணனும் ஆகிய படங்களை இயக்கியுள்ளவர் பத்ரி வெங்கடேஷ். இவர் 2020ல் 'அவள் அப்படித்தான்' படத்தை ரீமேக் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், படத்தின் உரிமையை பெறுவதற்கு முன்னரே அந்தப் படத்தின் இயக்குநர் ருத்ரையா இறந்துவிட்டார். தற்போது மீண்டும் இந்தப் படத்தை இயக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும், ஸ்ரீப்ரியா பாத்திரத்தில் ஸ்ருதிஹாசனையும், கமல், ரஜினி கதாபாத்திரங்களில் சிம்பு, பஹத் பாசிலை நடிக்கவைக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

இதுதான் சிம்புவின் ஆசையா?

இதுதான் சிம்புவின் ஆசையா?

சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி, சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. முன்னதாக இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசியிருந்த சிம்பு, கமல்ஹாசன் நடித்த எதாவது ஒரு படத்தின் இரண்டாம் பாகம் அல்லது ரீமேக்கில் நடிக்க ஆசை எனக் கூறியிருந்தார். ஆனால், அதற்கு கமலோ அப்படியெல்லாம் வேண்டாம், என்னுடன் ஒரு படத்தில் நடித்தால் போதும் என்றிருந்தார். இதனிடையே 'அவள் அப்படித்தான்' படத்தின் ரீ-கிரியேஷனில் சிம்பு நடிக்கவுள்ளதாக வெளியான தகவலை வைத்து பார்க்கும் போது, இந்தப் படத்தில் கமல் கேரக்டரில் சிம்பு நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X