»   »  லாஸ் ஏஞ்சல்ஸ் புறப்பட்டார் ரஜினி.. எந்திரன் 2 வேலைகள் ஆரம்பம்!

லாஸ் ஏஞ்சல்ஸ் புறப்பட்டார் ரஜினி.. எந்திரன் 2 வேலைகள் ஆரம்பம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எந்திரன் 2 பட வேலைகள் தொடர்பாக இன்று அதிகாலை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு புறப்பட்டார் ரஜினிகாந்த்.

கடந்த ஒரு மாதமாக மலேசியா மற்றும் தாய்லாந்தில் நடந்த கபாலி படப்பிடிப்பில் பங்கேற்ற ரஜினி, இரு தினங்களுக்கு முன் சென்னை திரும்பினார்.

அடுத்த கட்டப் படப்பிடிப்பு

அடுத்த கட்டப் படப்பிடிப்பு

கபாலியின் அடுத்த கட்டப் படப்பிடிப்பு தொடங்க இன்னும் சில வாரங்கள் ஆகும். அந்த இடைவெளியில் எந்திரன் 2 பட வேலைகளில் இறங்கியுள்ளார் ரஜினி.

எந்திரன் 2

எந்திரன் 2

கபாலிக்குப் பிறகு ரஜினி நடிக்கவிருக்கும் படம் எந்திரன் 2. ஷங்கர் இயக்கும் இந்த மெகா பட்ஜெட் படத்தின் பூர்வாங்கப் பணிகள் நடந்து வருகின்றன. இதில் ரஜினி இரு வேடங்களில் நடிக்கிறார்.

அமெரிக்காவில்

அமெரிக்காவில்

இந்தப் படத்தின் மேக்கப் டெஸ்ட் மற்றும் வில்லனாக நடிக்கும் அர்னால்டுடனான சந்திப்புக்காக ரஜினியும் ஷங்கரும் அமெரிக்காவுக்குப் புறப்பட்டனர். இன்று அதிகாலை துபாய் வழியாக லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றார் ரஜினி.

சீன் ஃபுட்

சீன் ஃபுட்

அவதார் போன்ற ஹாலிவுட் ப்ளாக்பஸ்டர் படங்களில் பணியாற்றிய மேக்கப் கலைஞர் சீன் ஃபுட் ரஜினிக்கு மேக்கப் டெஸ்ட் செய்யவிருக்கிறார்.

ஒரு வாரம்

ஒரு வாரம்

அமெரிக்காவில் ஒரு வாரம் தங்கியிருக்கும் ரஜினி, எந்திரன் 2 படத்தின் ஆரம்பகட்டப் பணிகளை முடித்துக் கொண்டு டிசம்பர் முதல் வாரம் சென்னை திரும்புகிறார்.

  English summary
  Rajinikanth leaving for US to undergo a special make up test and other pre production work of his mega budget project Enthiran 2.
  Please Wait while comments are loading...

  Tamil Photos

  Go to : More Photos

  சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil