Don't Miss!
- Lifestyle
உங்களிடம் இந்த பழக்கங்கள் இருந்தால் உங்களால் எப்பவும் எடையை குறைக்க முடியாதாம்... உடனே மாத்திக்கோங்க!
- Technology
அப்படி போடு! புதுச்சேரி, ஈரோடு, தர்மபுரியில் அறிமுகமான Jio 5G.. வெறும் ரூ.61-க்கு ரீசார்ஜ் செஞ்சா போதும்!
- News
தமிழ்நாட்டில் வரும் நாட்களில் நல்ல மழை இருக்கு.. எந்த மாவட்டங்களில் தெரியுமா! வானிலை மையம் தகவல்
- Automobiles
குறைவான விலையில் மைலேஜை வாரி வழங்கும் பைக்! பழைய நண்பன் ஹீரோவின் கதையை முடிக்க ஸ்கெட்ச் போட்ட ஹோண்டா!
- Sports
சிங்கம் போல் பாய்ந்த ரோகித், சுப்மான்.. தடுமாறிய நடுவரிசை.. இறுதியில் ஹர்திக் ஸ்பெஷல்.. இமாலய இலக்கு
- Finance
நல்லநேரம், சுந்தர் பிச்சை இவர் பேச்சை கேட்கல.. Google ஊழியர்கள் தப்பிச்சாங்க..!
- Travel
கன்பார்ம் செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டின் பயண தேதியை மாற்ற வேண்டுமா – இப்படி செய்யுங்கள்!
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
நீண்ட நாள் கழித்து என் நண்பரை சந்தித்தேன்.. சந்திரபாபு நாயுடுவை சந்தித்த ரஜினிகாந்த்!
சென்னை: சந்திரபாபு நாயுடு உடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு நடத்திய நிலையில், இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் ரஜினிகாந்த்.
ஜெயிலர் படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக இருந்தாலும் அடுத்து தனது மகள் இயக்கத்தில் நடிக்க உள்ள லால் சலாம் படத்தை முன்னிட்டு அந்த படம் வெற்றிபெற வேண்டி திருப்பதி மற்றும் அமின் தர்கா உள்ளிட்ட இடங்களுக்கு சென்று வந்தார்.
இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்தித்துள்ளார்.
கமல்
பிறந்தநாளில்
வெளியாகும்
அடுத்த
பட
அப்டேட்:
ரேஸில்
இருக்கும்
சபாஷ்
நாயுடு,
தேவர்
மகன்
2!

சந்திரபாபு நாயுடு ரஜினி சந்திப்பு
ஆந்திராவின் முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த நிலையில், அவருக்கு சால்வை அணிவித்து சந்திரபாபு நாயுடு உற்சாக வரவேற்பு அளித்துள்ள புகைப்படம் வெளியாகி உள்ளது.

நீண்ட நாள் நண்பர்
நீண்ட நாள் கழித்து நண்பர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்தேன்.அவருடைய உடல் நலம் நன்றாக இருக்க வேண்டும் என்றும் அரசியல் வாழ்க்கையில் வெற்றிப்பெற வேண்டும் என வாழ்த்துகிறேன் என நடிகர் ரஜினிகாந்த் அந்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வாழ்த்தி உள்ளார்.

பவன் கல்யாண் சந்திப்பு
சமீபத்தில் சந்திரபாபு நாயுடுவை நடிகரும் ஜனசேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யாண் நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். இருவரும் வரும் ஹைதராபாத் ஜூபிளி ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள சந்திரபாபு நாயுடுவின் இல்லத்தில் சுமார் 2 மணிநேரம் வரை பேசினர். ஆந்திராவில் ஆட்சி செய்து வரும் ஜெகன் மோகன் ரெட்டிக்கு எதிராக இருவரும் கூட்டணி வைக்க உள்ளனரா என எதிர்பார்ப்புகள் நிலவி வருகின்றன.

ரஜினியின் ஆதரவு
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்தும் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து தனது முழு ஆதரவை அளித்துள்ளார். அடுத்து வரும் சட்டசபை தேர்தலில் மீண்டும் சந்திரபாபு நாயுடு ஆட்சியை பிடிக்க தீவிரமான பல திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், ரஜினிகாந்த், பவன் கல்யாண் உள்ளிட்ட பிரபலங்கள் அவரை சந்தித்து வருகின்றனர்.

டோலிவுட் ஹீரோ இணைவாரா
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் படு வேகமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே அந்த படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் நடித்து வரும் நிலையில், மலையாள நடிகர் மோகன்லால் சமீபத்தில் ஜெயிலர் படத்தில் இணைந்துள்ளார். இந்நிலையில்,டோலிவுட்டில் இருந்து ஒரு முன்னணி நடிகர் இணைவாரா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.