»   »  பத்தாயிரம் ரசிகர்களுடன் படமெடுத்துக் கொள்கிறார் ரஜினி!!

பத்தாயிரம் ரசிகர்களுடன் படமெடுத்துக் கொள்கிறார் ரஜினி!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஏப்ரல் 12-ம் தேதியிருந்து ஒரு வாரத்துக்கு கோடம்பாக்கமே திருவிழா கோலத்துக்கு மாறிவிடும் என்பது சர்வ நிச்சயம்.

காரணம்... 6 நாட்கள் தொடர்ச்சியாக தனது ரசிகர்களைச் சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். இதுவரை இப்படியொரு சந்திப்பை அவர் நடத்தியதில்லை.

Rajinikanth to meet his 10000 plus fans

இந்த சந்திப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம் நேற்று ராகவேந்திரா மண்டபத்தில் நடந்தது. இந்த சந்திப்பின்போது ரஜினி - ரசிகர் சந்திப்பு எப்படி நடக்கும் என்பதை விவரித்துள்ளனர்.

அதன்படி, ஒரு நாளைக்கு 2000 ரசிகர்கள் வரை ரஜினிகாந்த் சந்திக்கிறார், படமெடுத்துக் கொள்கிறார்.

மொத்தம் 6 நாட்களே தொடர்ச்சியாக சந்திக்கவிருக்கிறார் ரஜினி. இதன் மூலம் 10 ஆயிரம் பேர்களுக்கு மேல் ரஜினியுடன் படமெடுத்துக் கொள்ள வாய்ப்பு கிடைத்துள்ளது.

ரஜினியைச் சந்திக்க விரும்பும் ரசிகர்கள் அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்களிடம் டோக்கன்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

English summary
Rajini fans club head quarters says that actor Rajinikanth will meet his 10,000 fans in Chennai from April 12th - 18.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil